மக்கள் மனதை பிரதிபலிக்காமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு!

அரசியல் தலைவர்கள்  விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மக்கள் மனதை பிரதிபலிக்காமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு என கூறியுள்ளார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

புதிய நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை?ஏப்ரல் 14-ஆம் தேதி கட்சிப்பெயர் ?

நடிகர்  ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், தனது ஆன்மிக குருக்களிடம் ஆசி பெறவும், பாபாவை வழிபடவும் இமயமலைக்கு சென்றார். தனது ஆன்மிக சுற்றப் பயணத்தை முடித்து கொண்டு இன்று மாலை சென்னை திரும்புகிறார். கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அவர் முடிவு செய்து விட்டு வந்திருப்பதாக கூறுகிறார்கள்.மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு வருகிற 5 நாட்களுக்கு நடக்கிறது. இது … Read more

15 நாள் பரோல் பரோல்?சசிகலா வருகை ?

15 நாள் பரோல்  கணவனின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவிற்கு வழங்கப்பட்டுள்ளது, சென்னை பெசன்ட்நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நடராஜனின் உடலிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். தற்போது அவரது உடலை சொந்த ஊரான தஞ்சைக்கு கொண்டு செல்லப்படுகிறது, இறுதி சடங்கிற்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன, இதில் சசிகலா அவர்கள் கலந்து கொள்வார்கள். சாலை வழியாக அவர் சிறையில் இருந்து தஞ்சை வருகிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அனைத்து மதத்திற்கும் சம உரிமை! ரத யாத்திரை செல்ல அனைத்து மதத்தினருக்கும் உரிமை உள்ளது!

முதல்வர் பழனிசாமி, ரத யாத்திரை செல்ல அனைத்து மதத்தினருக்கும் உரிமை உள்ளதாகவும் சட்டசபையில்  கூறியுள்ளார்.ரத யாத்திரை 5 மாநிலங்களில் அமைதியாக நடந்தது. ஆனால், முஸ்லிம்கள் ஆதரவு பெறுவதற்காக சட்டசபையில் திமுக தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு முதல்வர் அளித்த பதில்: ரதயாத்திரை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மதுரை ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி செல்கிறது. 5 மாநிலங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது. இந்த யாத்திரையால் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அனைத்து … Read more

டி.டி.வி தினகரன் குடும்பத்தினருடன் நடராஜன் உடலுக்கு அஞ்சலி !

நடராஜனின் உடலுக்கு ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி தினகரன் தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடராஜனின் உடலுக்கு ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினரும் சசிகலாவின் … Read more

தமிழகம் அமைதி பூங்காவாக சிறந்து விளங்குகிறது!பொறுக்க முடியாமல் ஸ்டாலின் செயல்படுகிறார்….

தமிழகம் அமைதி பூங்காவாக சிறந்து விளங்குகிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் செயல்படுகிறார். காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கம்யூ. ஆளும் கேரளாவில் ரதயாத்திரை அனுமதி என்று  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக … Read more

செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே பேரணியாக சென்ற சீமான் கைது !

செங்கோட்டை  வாஞ்சிநாதன் சிலை அருகே பேரணியாக சென்ற சீமான் கைது செய்யப்பட்டார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.செங்கோட்டை அருகே பாறைப்பட்டி என்ற பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தென்காசி அருகே செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் சிலை அருகே ராம ரத … Read more

கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

சென்னை உயர்நீதிமன்றம்  கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ பிறப்பித்த ‘லுக்அவுட்’ நோட்டீசுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற்றுத் தருவதாக சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முறையாக ஆஜராகவில்லை எனக்கூறி தேடப்படும் நபராக அறிவித்து கடந்த ஆண்டு ஜூன் … Read more

ரத யாத்திரைக்கும், முக்கிய இந்து அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை!

ரத யாத்திரை அனைத்து மாநிலங்களுக்கும் செல்கிறது, எந்த மாநிலத்திலும் ரத யாத்திரை தடுக்கப்படவில்லை என்று  அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ரத யாத்திரைக்கும், முக்கிய இந்து அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை  என்று  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலைச் … Read more

நடராஜன் உடலுக்கு விவேக், கிருஷ்ண பிரியா, ஷகிலா உள்ளிட்டோர்  அஞ்சலி !

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  விவேக், கிருஷ்ண பிரியா, ஷகிலா உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்தினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.