அனைத்து மதத்திற்கும் சம உரிமை! ரத யாத்திரை செல்ல அனைத்து மதத்தினருக்கும் உரிமை உள்ளது!

முதல்வர் பழனிசாமி, ரத யாத்திரை செல்ல அனைத்து மதத்தினருக்கும் உரிமை உள்ளதாகவும் சட்டசபையில்  கூறியுள்ளார்.ரத யாத்திரை 5 மாநிலங்களில் அமைதியாக நடந்தது. ஆனால், முஸ்லிம்கள் ஆதரவு பெறுவதற்காக சட்டசபையில் திமுக தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு முதல்வர் அளித்த பதில்: ரதயாத்திரை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மதுரை ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி செல்கிறது. 5 மாநிலங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது. இந்த யாத்திரையால் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அனைத்து மதத்திற்கும் சம உரிமை உண்டு.

தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் எனக்கூறினார்.கைதுஆனால், முதல்வரின் பதிலை ஏற்காத திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதனையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனையடுத்து திமுக எம்எல்ஏக்கள் தலைமை செயலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.தீர்மானம்:முன்னதாக, இது தொடர்பாக தீர்மானத்தை கொண்டு வந்து ஸ்டாலின் பேசும் போது, தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா?ரதயாத்திரையால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ரதயாத்திரை ராமன் கோவில் கட்ட என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. மதசார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பன்மை தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த அரசு அனுமதித்துள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment