IPL 2018:ஐ.பி.எல் போட்டியின் போது, மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் தாங்கள் பொறுப்பல்ல…!வேல்முருகன் எச்சரிக்கை ….!

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியின் போது, மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்று  எச்சரித்துள்ளார். இதனால்  பாதுகாப்பு பணியில் எம்சி சாரங்கன், இணை ஆணையாளர்கள், 13 காவல் துணை ஆணையாளர்கள், 7 கூடுதல் துணை ஆணையாளர்கள், 29 உதவி ஆணையாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கமாண்டோ படையின் ஒரு அணியும், சென்னை காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த அதி தீவிர … Read more

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழக பல்கலைக் கழகங்களை எடுக்க முயற்சி? திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆவேசம் ….

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்துளளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெருமளவில் சொத்துகள் கொண்ட தமிழக பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வரும் ஜூன் மாதம் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மாநில சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக் கழகங்களை தாரை வார்க்க திரைமறைவில் ரகசியமாக மத்திய பா.ஜ.க. அரசுடன் கைகோர்த்து … Read more

2019ம் ஆண்டு தேர்தலின் போது மோடி அலையில் பாம்பு, கீரி அடித்துச் செல்லலாம்…! ‘புலி’யை அடக்கமுடியாது’…!

 சிவசேனா கட்சி 2019ம் ஆண்டு தேர்தலின் போது மோடி அலையில் பாம்பு, கீரி என்று இருக்கும் எதிர்க்கட்சிகள் அடித்துச்செல்லலாம், ஆனால், புலியாக இருக்கும் எங்களை அடக்கமுடியாது என்று பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. பாஜகவின் நிறுவன நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது மும்பையில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மோடியின் அலையில் எதிர்க்கட்சிகள் அனைவரும் அடித்துச்செல்லப்படுவார்கள். பாம்புகள், கீரிகள், நாய், பூனை என எதிர்துருவங்களாக இருந்தவர்கள் எதிர்க்கட்சி … Read more

கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்திவைப்பு…!! கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவிப்பு…!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கப் படுவதாக, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கில், தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகவே நடத்தப்படுவதாகவும் முறையிடப்பட்டிருந்தது. மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை வாங்கவோ, அவற்றை பரிசீலிக்கவோ கூடாது எனவும், தற்போதைய நிலையே … Read more

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு…! மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு 22 கோடி ஒதுக்கீடு…!!

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை, ஏழாயிரம் ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக கூறியுள்ளது. வனத்துறை சார்பில் 7 லட்சம் மரக்கன்றுகளும்,  ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 63 லட்சம் மரக்கன்றுகளும் நட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி 22 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. … Read more

தமிழக அரசு நிர்வாகம் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ஒப்புதல்…!

தமிழக அரசு அத்திக்கடவு – அவிநாசி கூட்டுக்குடீநீர் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில்  முதல் கட்டமாக 1,652 கோடி ரூபாய் நிதியை செலவிட ஒப்புதல் வழங்கியுள்ளது. திட்டத்தை செயல்படுத்தும் வகையில் குழாய் , மின் இணைப்பு, பம்பிங் முதலியவற்றை அமைத்தல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு தொடர் பராமரிப்புகளை மேற்கொள்வதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் வெள்ள நீரை, கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு … Read more

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆத்யநாத் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.எல்.ஏ.-வுக்கு சம்மன்…!

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆத்யநாத்  உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. தனது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை, காவல்நிலைய விசாரணையில் உயிரிழந்ததையடுத்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பங்கெர்மாவ் ((Bangermau)) தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. தன்னை கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். பாஜக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிய அவர், லக்னோவில் உள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லம் … Read more

IPL 2018: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…!ஐபிஎல் போட்டியில் பாதுகாப்புப் பணியில் 2000 போலீசார்….!

2000 போலீசார் சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கு  பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். நாளை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் சென்னை-கொல்கத்தா இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு சென்னை பெருநகர் காவல் ஆணையர் விசுவநாதன் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் எம்சி சாரங்கன், இணை ஆணையாளர்கள், 13 காவல் துணை ஆணையாளர்கள், 7 கூடுதல் துணை ஆணையாளர்கள், 29 உதவி ஆணையாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2000 காவலர்கள் பாதுகாப்பு … Read more

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே நகரில் வசிப்போரின் எண்ணிக்கையை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகம்…!

வாகனங்களின் எண்ணிக்கை மகாராஷ்ட்ரா மாநிலம் புனே நகரில் வசிப்போரின் எண்ணிக்கையை விட  அதிகரித்துள்ளது. அங்கு தற்போது வசிப்போரின் எண்ணிக்கை 35 லட்சமாக உள்ள நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதில் கார்களின் எண்ணிக்கை  ஆறு லட்சத்து 45 ஆயிரம், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 27 லட்சத்து மூன்றாயிரம். வாடகை கார்களின் எண்ணிக்கையும் 28 ஆயிரத்து 344 ஆக அதிகரித்து உள்ளது என்று புனே நகர வட்டார போக்குவரத்து தலைமை அதிகாரி பாபாசேகன் … Read more

IPL 2018: ஐ.பி.எல் போட்டிக்கு நீங்க கொண்டுட்டு வர்ற எல்லாத்துக்கும் தடை …!

சென்னையில்  ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் :  ➤ பேனர்கள், கொடிகள், விளம்பரப் பட மற்றும் போட்டி ஸ்பான்சர்களுக்கு எதிரான படங்கள் ஆகியவற்றை மைதானத்தின் உள்ளே கொண்டு வர தடை. ➤ பைகள், கைப்பை, மொபைல் போன், பேஜர், ரேடியோ, லேப்டாப், கம்யூட்டர், டேப் ரெக்கார்டர், பைனாகுலர், ரிமோட் கண்ட்ரோல், ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி உள்ளிட்ட எலட்ரிக்கல் சாதனங்களும், இசைக்கருவிகளும், வீடியோ கேமரா, டிஜிட்டல் கேமரா உள்ளிட்டவை கொண்டு வர தடை. … Read more