விசைத்தறி கூடத்தில் 6வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி தமிழக அரசுக்கு நோட்டிஸ்….!!

2014ல் கோவையில் விசைத்தறி கூடத்தில் 6வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டிஸ்அனுப்பியுள்ளது. உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்கள் கொத்தடிமைகள் என அறிவிக்கவும், மறுவாழ்வு பெறுவதை உறுதிப்படுத்தவும் என கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

முகநூல் மூலம் பழகி காதலிப்பதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி….!!

கோவையில் முகநூல் மூலம் பழகி காதலிப்பதாக கூறி ரூ.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட இளம்பெண் உட்பட 3 பேர் கைது. சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சுருதி, அவரது தாயார் சித்ரா, பிரசன்னா ஆகியோரை காவல்துறை கைது செய்தது.

கோவையில் 101 மற்றும் 70 வயதுடைய மூதாட்டிகள் மகன் மீது மோசடி புகார் …!!

கோவையில் 101 மற்றும் 70 வயதுடைய மூதாட்டிகள் மகன் மீது மோசடி புகார் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.அவர்களது மகன் தங்களிடம் ஏமாற்றி அபகரித்த சொத்தை மீட்டு இறுதி நாட்களில் வாழ வழிவகுக்க செய்யக்கோரி மகள் வழி பேரனுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பகுதியில் யானைகள் நலவாழ்வு முகாம்,அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..!!

கோவை : மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பகுதியில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கியது. இந்த முகமை தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நலவாழ்வு முகாமில் தமிழகத்தில் இருந்து 31, புதுச்சேரியில் இருந்து 2 யானைகள் பங்கேற்றுள்ளன. இம்முகாமில் யானைகளுக்கு மருத்துவ சிகிச்சை, பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டை காலி செய்ய நெருக்கடி தரும் போலீஸ்!

கோவை மாவட்டம் மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் ஒன்றாகும்.நகர் முழுவதும் சாலைகளிலும் ,சாலை ஓரங்களிலும் நெரிசல் மிகுந்து காணப்படும்.இதனால்  கோவை ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற போலீஸார் நெருக்கடி தருவதாக ஆட்டோ டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முன்னதாக கோவை சந்திப்பு ரயில் நிலைய வளாகத்திற்குள் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. ஆனால் பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி சிறிது காலம் வெளியேறுமாறு அதிகாரிகள் கூறினர். இதனை நம்பி ரயில் நிலைய வளாகத்தில் இருந்து வெளியே … Read more

சென்னை-கோவை,அகமதாபாத்-மங்களூரு இடையே புதிய சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சிறப்பு ரயில்கள் இயக்கம் சென்னை எழும்பூர்-கோவை இடையே டிச.20 இரவு 11.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும். அதேபோல் அகமதாபாத்-மங்களூரு இடையே டிச.23,30 தேதிகளில் இரவு 9.35 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கபடும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. source:Dinasuvadu.com

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக இயற்கை பொருள்களை கொண்ட புதிய பைகளை உருவாக்கிய திருப்பூர் வாலிபர்…!

திருப்பூர் “ரிஜெனோ” நிறுவன சிபி செல்வன் என்ற வாலிபர் தானே தயாரித்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கைப் பொருள்களால் ஆன எளிதில் மக்கக்கூடிய பைகளை கோவை மாநகராட்சி புழக்கத்தில் விட்டுள்ளது. இந்த பைகளின் பயன்பாடு அதிகரிக்கும் பட்சத்தில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு குறையும்,மேலும் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளை அரசே ஊக்குவிக்கும் பட்சத்தில் எளிய மக்களிடம் இந்த கண்டுபிடிப்பு விரைவில் சென்றடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. source: dinasuvadu.com

சென்னை,கோவை,நெல்லை பகுதியிலிருந்து புறப்படும் வெளிமாநில ரயில்களின் நேரத்தை அதிரடியாக மாற்றியது ;தெற்கு ரயில்வே

சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை காலை 7.15க்கு புறப்பட வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 9.15க்கு புறப்படும்.அதேபோன்று நெல்லையிலிருந்து நாளை காலை 7.20க்கு புறப்பட வேண்டிய தாதர் வாராந்திர விரைவு ரயில் 8.50க்கு புறப்படும். கோவை – சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில் நாளை மாலை 3.25க்கு பதில் மாலை 5.25க்கு புறப்படும் .மேலும் கோவை விரைவு ரயில் நாளை பிற்பகல் 2.55க்கு பதில் மாலை 5.10க்கு சென்னைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது

கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தடை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 100 பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது நடைபெற்று வருகிறது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரது படம் போட்டு பல பெரிய பெரிய பேனர்களும்,தோரண வாயில்களும் மக்கள் அனுதினமும் பயணிக்கும் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்தன.இந்நிலையில் உயர் நீதிமன்றமானது உயிரோடு … Read more

கோவை வாலிபர் ரகுவை கொன்றது அதிமுகவின் அலங்கார வளைவா…? அல்லது திமுகவின் லாரியா..??

அதிமுக அலங்கார வளைவால் தான் இளைஞர் ரகு கோவையில் உயிரிழந்தார். அதனை வேறு ஏதோ காரணம் சொல்லி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திசைதிருப்புகிறார் என சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ.கார்த்திக் நானோ, எங்களது திமுக தொண்டர்களோ உங்களுடைய மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு திமுக சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் சாலையில் அதிமுக அமைத்த அலங்கார வளைவால்தான் ரகுவின் உயிர்போனது என திமுக எம்.எல்.ஏ பேட்டி கொடுக்கிறார் திமுக எம்.எல்.ஏவின் லாரிதான் ரகு மீது மோதியது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி … Read more