MGR நூற்றாண்டு விழாவால் நேர்ந்த விபரீதம்…!

வருகிற டிசம்பர் 3ம் தேதி கோவை மாநகரில் MGR நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது.இதனையடுத்து கோவையில் உள்ள அவினாசி சாலை முழுவதும் சாலையில் குழி தோண்டி கட் அவுட் மற்றும் ஆர்ச் பணிகள் நடந்து வருகிறது. இன்று காலை கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அருகே ரகு என்கிற இளைஞர் இருசக்கரவாகனத்தில் வந்த போது சாலையில் கட்டிய ஆர்ச் மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வாலிபர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.இதனையடுத்து வீட்டில் பெற்றோர்கள் இவருக்கு திருமண … Read more

போராட்டமில்லாமல் யாராட்டமும் செல்லாது…!

கோவை- சென்னை ரயிலில் ஈசா லிங்கத்தை அடையாளமாக்கியது ரயில்வே. உடனடியாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் அறிவித்தது.மேலும் சில  சமூகநீதி இயக்கங்களும் இதற்கு  கண்டனம் தெரிவித்தனர். முற்போக்கு எண்ணம் கொண்ட பத்திரிகையாளர்கள் முக்கியத்துவம் அளித்து தங்கள் ஊடகங்களில் வெளியிட்டனர்.தீக்கதிர் உள்ளிட்ட பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களிலும் போராளிகள் கொந்தளித்தனர். ரயில்வே நிர்வாகம் பணிந்தது லிங்கம் மாற்றப்பட்டு கோவை ரயில் நிலையத்தின் படம் இடம்பெற வைத்தது…

விமானத்தில் பறவை மோதியதால் திடீர் தரையிறக்கம்.

கோயம்புத்தூர்; விமான நிலையத்தில் இருந்து ஏர் அரேபியா என்ற விமானம் , ஓடுதளத்தில் பறந்து வந்த மயில் மீது மோதி விமானம் சேதம்  அடைந்தது. இந்த விபத்தையடுத்து,விமானி பயணிகளை பத்திரமாக தரை இறங்கினார். ஷார்ஜா செல்ல வேண்டிய இந்த விமானத்தில் 163 பயணிகள் இருந்தனர்.தற்போது இந்த பயணிகள்  ஓட்டலில் தங்க வைக்கபட்டு உள்ளனர். விமானத்தை சரிசெய்ய, சென்னையில் இருந்து தொழில்நுட்ப குழு கோவை விரைந்துள்ளது.