லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை டிஜிபி கந்தசாமி,முதலமைச்சருடன் சந்திப்பு.

லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை டிஜிபி கந்தசாமி அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 60 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதால் அவரிடம் … Read more

#Breaking:குடியரசு தலைவரை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக,முதல்வர் ஸ்டாலின் தற்போது டெல்லி புறப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார்.அவருடன் எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் செல்கின்றனர். முதல்வராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக முதல்வர் டெல்லி செல்கிறார்.மேலும்,முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்வர் பேசவுள்ளார். அதன்படி,நாளை 12:15 மணிக்கு குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர்  ஸ்டாலின் … Read more

#Breaking:முதல்வர் ஸ்டாலின் நாளை திருவாரூர் பயணம்..!

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நாளை திருவாரூரில் உள்ள முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு செல்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக வெற்றி பெற்று,தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் 7 ஆம் தேதியன்று ஆட்சிப் பொறுப்பேற்றார். இந்நிலையில்,மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் பிறந்த ஊரான திருவாரூருக்கு, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை செல்கிறார்.ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் … Read more

#Breaking:”காலதாமதமின்றி குடும்ப அட்டைகள்” – அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி அறிவிப்பு…!

குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி அதனை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது: “குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும்.அப்பொருட்களின் … Read more

#Breaking:முதல்வர் ஸ்டாலினுடன் பா.சிதம்பரம் சந்திப்பு..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் சந்தித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை முன்னாள் மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பா.சிதம்பரம் இன்று சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை பா.சிதம்பரம் அவர்கள் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக,பா.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரும் தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் … Read more

#Breaking: +2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து – முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

 +2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளி கல்வி நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்  சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் … Read more

#Breaking:கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்வா? மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் வருகின்ற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா குறைவாகவுள்ள 23 மாவட்டங்களில் பேருந்து இயக்கம்,நூலக அனுமதி, ஜவுளிக்கடைகள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,கொரோனா … Read more

#Breaking:தமிழகத்தில் 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு – முதல்வரின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 22 ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையில்,2 தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது.இந்த கூட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றி தொடங்கி வைத்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து … Read more

“நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்” – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்..!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி.ராகுல் காந்தியை இன்று டெல்லியில் சந்தித்தை குறித்து, “நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்” என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இதனையடுத்து,நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த அவர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளார். அதன்பின்னர்,முதல்வர் … Read more

#Breaking:காவல்துறையினருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை;ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் அறிவிப்பு….!

காவல்துறையினருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றி வரும் 1,17,184 காவல் துறையினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர்.அவர்களது … Read more