வேலைக்கேட்டு மனு;கொரோனா நிதிக்காக 2 பவுன் செயின் கொடுத்த இளம்பெண்- முதல்வர் பாராட்டு..!

மேட்டூரை சேர்ந்த செளமியா என்ற இளம்பெண்,தனக்கு வேலைக்கேட்டு அளித்த மனுவுடன் கொரோனா நிதிக்காக 2 பவுன் செயினையும்,முதல்வரிடம் கொடுத்துள்ளார்.  அதற்கு பாராட்டு தெரிவித்து,முதல்வர் ஸ்டாலின்,பொன்மகளுக்கு விரைவில் வேலை என ட்வீட் செய்துள்ளார். நேற்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார்.முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி முதல் 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோரும் பங்கேற்றனா். … Read more

#Breaking: ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…!

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக,ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது சந்தித்துள்ளார். கடந்த மாதம் 13-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின்,ஆளுநரை சந்தித்த போது கொரோனா நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்தார்.பின்னர் கொரோனாவிற்கு தமிழக அரசு  எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தற்போது சந்தித்துள்ளார். மேலும்,தற்போது தமிழகத்தில் உள்ள ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து … Read more

#Breaking:தொழில் நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த கூடுதல் அவகாசம்;12 மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த கூடுதல் காலஅவகாசம் தர வேண்டும் என்று, 12 மாநில முதலமைச்சர்களுக்கு,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு,குறு,சிறு,நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள்,இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி,கேரளா, மேற்கு வங்கம் … Read more

#Breaking:மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன்,முதல்வருடன் சந்திப்பு…!

மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன்,முதல்வருடன் சந்திப்பு. மாநில வளர்ச்சிக்கான கொள்கைகள் வகுக்கப்படும். மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில்,மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசனும்,துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்,மருத்துவர் சிவராமன், டிஆர்பி ராஜா உள்ளிட்ட 8 பேர் பகுதி நேர உறுப்பினராக நியமனம் செய்யபப்ட்டுள்ளனர். இந்நிலையில்,மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் … Read more

#Breaking:கொரோனா பாதித்த சிங்கங்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை..!

சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள கொரோனா பாதித்த சிங்கங்கள். முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை. சென்னையில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில்,9 சிங்கங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில் 9 வயது நீலா என்ற பெண் சிங்கம் ஒன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.இதனை தொடர்ந்து மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும்,பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு பசியின்மை,சளி தொந்தரவு இருந்ததால் அவைகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. … Read more

காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாள்;முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!

இன்று காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாள். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலில் உள்ள அவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழக அரசின் சார்பாக கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ,சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும்,அவருடன் மற்ற அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு மலர் … Read more

#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு…! முதல்வர் இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமாக பரவி வரும் நிலையில்,கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக,கொரோனா பரவலை தடுக்க கடந்த மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.எனினும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக கடந்த மே  24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை … Read more

#Breaking: திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் -முதல்வர் அறிவிப்பு..!

திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்,குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி,குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. மேலும்,அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து,இந்த இரண்டு திட்டங்களையும்,தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து,மறைந்த திமுக முன்னாள் தலைவர் மற்றும், முன்னாள் முதல்வருமான … Read more

#Breaking:மதுரையில் 70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்  அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.கருணாநிதியின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு இன்று பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில்,மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்  அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:”புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதன் மீதும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வாழ்நாள் … Read more

“திருவாரூரில் ரூ.30 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்”- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

திருவாரூரில் ரூ.30 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில்,திருவாரூரில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் ஒன்றாகும். இதுதொடர்பாக,முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியினை கருத்தில் கொண்டும்,விவசாய விளைபொருட்கள் மழை வெள்ள பாதிப்பினால் சேதமடைவதை … Read more