வேலைக்கேட்டு மனு;கொரோனா நிதிக்காக 2 பவுன் செயின் கொடுத்த இளம்பெண்- முதல்வர் பாராட்டு..!

மேட்டூரை சேர்ந்த செளமியா என்ற இளம்பெண்,தனக்கு வேலைக்கேட்டு அளித்த மனுவுடன் கொரோனா நிதிக்காக 2 பவுன் செயினையும்,முதல்வரிடம் கொடுத்துள்ளார்.  அதற்கு பாராட்டு தெரிவித்து,முதல்வர் ஸ்டாலின்,பொன்மகளுக்கு விரைவில் வேலை என ட்வீட் செய்துள்ளார். நேற்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார்.முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி முதல் 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோரும் பங்கேற்றனா். … Read more

#BREAKING: மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

இன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார். மேட்டூா் அணைப்பாசனம் மூலம் 12  மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறுகிறது. மேட்டூா் அணையில் இருந்து வருடந்தோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும். இந்த நாள்களில் விவசாயிகளுக்கு 330 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். இந்நிலையில், இன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார். முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி முதல் 10 … Read more

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு…

காவிரி நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் நல்ல நிலைக்கு வந்தையடுத்து மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசன தேவைக்காக ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில், தற்போது  நீர்திறப்பு 15,000லிருந்து 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,458 கனஅடியில் இருந்து 13,001 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.35 அடியாகவும், நீர்இருப்பு 54.20 டிஎம்சியாக உள்ளது என்பது … Read more

மேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக உயர்வு..!

மேட்டூர் அணை  நீர்மட்டம் 1.30 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி பிறக்கும் இடமான குடகு உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது, மேலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும்தொடர் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அந்தவகையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் … Read more

மின்தேவை குறைவு.! 4-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தம்.!

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 2-வது அலகில் பராமரிப்பு பணி நடப்பதால் மற்ற அலகுகளின் மூலம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மின்தேவை குறைந்ததால், நேற்று காலை 4-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், தற்போது  1 மற்றும் 3-வது அலகுகளில் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யபடுகிறது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 4 அலகுகளில் மூலம் 210 மெகாவாட் வீதம் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 12 -ல் மேட்டூர் அணை திறப்பு..?

மேட்டூர் அணையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் இருப்பதால், ஜூன் 12-ம் தேதி அணையைத் திறக்க வேண்டும் டெல்டா விவசாயிகள் மத்தியில் கோரிக்கை வைத்துள்ளனர். மேட்டூர் அணையில் கடந்த 2011 -ம் ஆண்டு குறுவை பாசனத்துக்காக ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு, 8 ஆண்டுகளாகக் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் போதிய  நீர் இல்லாததால் 8 ஆண்டுகளாக தண்ணீர்  திறக்கப்படவில்லை. இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து … Read more

கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டூர் அனல்மின் நிலைய பணிகள் தொடக்கம்!

கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டூர் அனல்மின் நிலைய பணிகள் தொடக்கம். உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமான முறையில் தனது தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், இதனை  கட்டுப்படுத்தும் முயற்சியில், உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் இதுவரை 4,181,218 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.   இந்நிலையில், இந்த கொரோனா வைரஸை தடுப்பதற்கு இந்தியா முழுவதும் பல முன்னெச்சரிக்கை … Read more

மேட்டூர் – சரபங்கா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்..!

மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளான எடப்பாடி, வனவாசி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் இருக்கும் ஏரிகளுக்கு திருப்பிவிடும் படி அப்பகுதி மக்கள் பல நாள் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த பகுதிகளில் ஏரிகளின் மட்ட அளவுகள் மேட்டூர் அணையின் மட்ட அளவை விட உயரமான உள்ளது. இதனால் கால்வாய் அமைத்து நீர் கொடுக்கமுடியாது. நீரேற்று திட்டத்தின் மூலம் மட்டுமே நீர் கொடுக்கமுடியும். மேட்டூர் அணையின் உபரிநீரை சரபங்கா, வசிஷ்ட மற்றும் … Read more

இனிமேல் தண்ணீர் கிடையாது.! மாலை 6 மணியுடன் நீர் நிறுத்தம்.!

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்ததாலும் , அறுவடை நெருக்கியதாலும் இன்று மாலையுடன் மேட்டூர்  அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படுகிறது. இந்த முறை காவிரி டெல்டா பாசனத்திற்கு 169 நாட்ககளில் 150 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கப்பட்டு உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்ததாலும் , அறுவடை நெருக்கியதாலும் இன்று மாலை 6 மணியுடன் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படுகிறது.இந்த முறை காவிரி டெல்டா பாசனத்திற்கு 169 நாட்ககளில் 150 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கப்பட்டு உள்ளது.மேட்டூர் அணையிலிருந்து … Read more

83 ஆண்டுகள் கழித்து மேட்டூர் அணையில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனை! முதல்வர் பெருமிதம்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி குறிப்பிட்டு பேசினார். அப்போது மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து 83 ஆண்டுகள் கழித்து அதிமுக ஆட்சியில்தான் குடிமராத்து பணிகள் அடிப்படையில் மேட்டூர் அணை தூர்வாரபட்டது என குறிப்பிட்டு பேசினார். மேலும் நீட் விவகாரத்தில் தற்போது எழுந்துள்ள ஆள்மாறாட்ட புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வரும் … Read more