#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு…! முதல்வர் இன்று ஆலோசனை..!

#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு…! முதல்வர் இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமாக பரவி வரும் நிலையில்,கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக,கொரோனா பரவலை தடுக்க கடந்த மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.எனினும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக கடந்த மே  24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து, மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி அதிகாலை வரை  ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில்,மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டமானது காலை 11.30 மணியளவில் தொடங்க உள்ளது.அந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து,முதல்வர் தலைமையிலான இந்த அலோசனைக் கூட்டத்தில்,கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கலாமா? அல்லது ஊரடங்கை தளர்வுகள் இல்லாமல் மேலும் தொடரலாமா? என்று ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube