கொரோனா சிகிச்சை பெறுபவர்களை வீட்டிலேயே பராமரிக்கும் திட்டம் ! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.

கொரோனா சிகிச்சை பெறுபவர்களை வீட்டிலேயே பராமரிக்கும் அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று  தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று ஒரு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.அதாவது,அம்மா கோவிட் -19 என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.இந்த திட்டத்தின்  நோக்கம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாகும்.இதற்காக 20 பேர் கொண்ட … Read more

கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது – முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற 33.31 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதன்பிறகு நிகழ்ச்சியில் தடுப்பு பணிகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் உலகில் உள்ள வல்லரசு நாடுகளே கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரக் கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் நோய் … Read more

ரூ. 20.86 கோடி மதிப்பிலான 60 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.!

முதல்வர் பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 20.86 கோடி மதிப்பிலான 60 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பல நலதிட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சமீபத்தில் கூட 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென்காசியில் செயல்படுத்தப்பட உள்ள 8 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டும் வருகிறார். அந்த … Read more

தேவையான உதவிகளை செய்ய தயார் -கேரள முதல்வரிடம் பேசிய தமிழக முதல்வர்

கேரள நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என்று   தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்தது. இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக தமிழக … Read more

#BREAKING : மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி – மு.க.ஸ்டாலின்

மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில் புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பின் 3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை … Read more

“எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தது காட்டுமிராண்டித்தனம் ,கடுமையாக கண்டிக்கத்தக்கது”- முதல்வர் பழனிச்சாமி

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த காட்டுமிராண்டித்தனம், கடுமையாக கண்டிக்கத்தக்கது என தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு நேற்று காவித்துண்டு அணிவித்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அங்கிருந்து சென்றனர். மேலும், இது தொடர்பாக அம்மாநில … Read more

கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனிடையே தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மறு ஆய்வு குழு ஓன்று அமைக்கப்பட்டது.இந்த குழு தாக்கல் செய்த  அறிக்கையில்,  தமிழகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து ஜூன் 10-ம் தேதி வரை உயிரிழந்தோரின் விடுபட்ட எண்ணிக்கை *444 என தெரிவிக்கப்பட்டது.இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சகமும் இந்த அறிக்கைக்கு … Read more

தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனாவை குறைக்க நடவடிக்கை – முதல்வர் பழனிசாமி.!

தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பை குறைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் முதலமைச்சர் பழனிசாமி கிருஷ்ணகிரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்களை நியமித்துள்ளதாகவும், கொரோனா பாதிப்பை கண்டறிய … Read more

வீரமரணமடைந்த தமிழக வீரர் ! முதல்வர்,துணை முதல்வர் இரங்கல்

வீரமரணமடைந்த தமிழக வீரருக்கு முதல்வர்,துணை முதல்வர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்று  இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்   முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இதற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து தனது ட்விட்டர் … Read more

கட்டுக்குள் வராத கொரோனா ! முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

 முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 42,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இதுவரை 23,409 பேர் குணமடைந்துள்ளனர்.18,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 397 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதன்விளைவாக  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் … Read more