மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை !

மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில், நேற்று  ஒரே நாளில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 42,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதுவரை 23,409 பேர் குணமடைந்துள்ளனர்.18,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 397 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். வருகின்ற … Read more

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ! மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் வருகின்ற 15 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். வருகின்ற 17ஆம் தேதி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஆலோசனை  நடைபெற உள்ளது  குறிப்பிடத்தக்கது.

கடன்களை திருப்பி செலுத்த 3 மாத கால அவகாசம்.! – தமிழக முதல்வர் அறிவிப்பு

பயிர்கடன், வீட்டுக்கடன், கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பெருமளவு பாதித்துள்ளது. எனவும் தமிழகத்தில் இதுவரை ஆறரை லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் பல்வேறு … Read more

இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.  தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இந்த கூட்டத்தில் மருத்துவர்கள் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தான் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதியோடு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், இன்று  மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த … Read more

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கேரள முதல்வர் பிரனாயி விஜயன்.!

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதில் 3 ஆம் இடத்தில் தமிழகம் உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள பால் சுமார் 1,80,000 லிட்டர் வீணாகியுள்ளது.  இதனை தமிழக அரசிடம் கேரள அரசு சார்பில் கூறியுள்ளது. இதனை அடுத்து, தமிழகம் சார்பில் ஈரோடு ஆவின் பால் நிறுவனம் கேரளாவில் 50,000 லிட்டர் பாலை வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாம். இதனால் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் என தகவல் … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் : தமிழக ஆளுநரை சந்திக்க உள்ள முதல்வர் பழனிச்சாமி.!

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளத.   இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க்க உள்ளாராம். அப்போது, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆலோசிக்க முடிவு செய்துள்ளனராம். 

கர்ப்பிணிகளுக்கு தனி கவனம்.! அவசர அழைப்புக்கு 102 மற்றும் 104-ஐ அழைக்கலாம்.!

கொரோனா தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு மட்டும் வெளியில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கர்ப்பிணி பெண்கள் நலன் குறித்து முக்கிய தகவலை கூறியுள்ளார். அதன்படி, வரும் 2 மாதங்களில் சுமார் 1.5 லட்சம் கர்ப்பிணிகள் பிரசவிக்க உள்ளனர். அவர்களின் உடல்நலன் குறித்து மருத்துவ அலுவலர்கள் தனி கவனம் செலுத்தவேண்டும் எனவும், மேலும், கர்ப்பிணிகள் அவரச … Read more

350 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை பார்வையிடும் தமிழக முதல்வர்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் நாடுமுழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது.  இந்நிலையில் சென்னை ஓமந்தூரில் கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையினை இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட உள்ளார். இங்கு கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக 350 படுக்கைகள்  உருவாக்கப்பட்டுள்ளது. … Read more

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதியாக ரூ.4000 கோடி வழங்கக் கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் @PMOIndia … Read more

கொரோனா குறித்து முதல்வர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!

கொரோனா வைரஸால் தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நான்காவது முறையாக மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தொடங்கி  உள்ளது . கடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டது. இந்த ஆலோசனை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று காலை  1 முதல் 9ஆம் … Read more