கடன்களை திருப்பி செலுத்த 3 மாத கால அவகாசம்.! – தமிழக முதல்வர் அறிவிப்பு

பயிர்கடன், வீட்டுக்கடன், கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உரையாற்றினார்.

அப்போது பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பெருமளவு பாதித்துள்ளது. எனவும் தமிழகத்தில் இதுவரை ஆறரை லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். மேலும், கொரோனா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பயிர்கடன், வீட்டுக்கடன், கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். மேலும், 2.02 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா விலையில்லா ரேஷன் பொருட்களும், 1000 ரூபாய் நிவாரண உதவி தொகையும் வழங்கப்படுவதாகவும் தமிழக முதல்வர் அறிவித்தார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.