ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே அறிவிப்பு – மத்திய அரசு.!

இன்று முதல் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே கொரோனா பாதிப்பு  குறித்த தகவல்கள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், மூன்றாவது முறையாக மத்திய அரசு ஊரடங்கை மேலும் 2 வாரத்திற்கு நீட்டித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை தினமும் இரண்டு முறை நாடு முழுவதும் எவ்வளவு..? கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விபரங்களை அறிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தினமும் காலை, மாலை என இருமுறை கொரோனா … Read more

இந்தியர்களை மீட்க இயக்கப்படும் 64 சிறப்பு விமானங்களின் விபரங்கள்.!

வெளிநாடுகளில் இந்தியர்களை மீட்க மே 7 முதல் 13 வரை 64 சிறப்பு விமானங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் 36,65,403 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 12,06,314 பேர் மீண்டுள்ளனர். மேலும் கொரோனாவால் 25,2,944 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இந்தியாவுக்கு வர முடியாமல் பல நாடுகளில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு … Read more

சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள்.! மத்திய அரசு அனுமதி.!

வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலையின்றி உணவிற்காக தவித்து வருகின்றனர். பலர் நடத்தே தங்கள் ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. ஊரடங்கு காரணமாக வெளியூர்களில் உள்ளவர்கள் சொந்த  … Read more

தமிழகத்தில் 12 மாவட்டகளை “ஹாட் ஸ்பாட்” அறிவித்த மத்திய அரசு .!

தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவிப்பு. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 40 நாள்களுக்கு   ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிய உள்ளது. இதையெடுத்து, கொரோனா பாதித்த  733 மாவட்டங்களை மத்திய சுகாதாரத்துறை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்று மண்டலங்களாக பிரித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில்  130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும்,   284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும்,  319 மாவட்டங்கள் பச்சை … Read more

அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது -மத்திய அரசு பாராட்டு

அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு  தெரிவித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .எனவே தான் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ,  அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம்  சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு  தெரிவித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் … Read more

அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைனில் விற்கக்கூடாது – மத்திய அரசு

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இருந்த தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோன தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீடிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஏப்ரல் 20 க்கு பிறகு நிபந்தனைகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும் என்று அறிவித்தார். அதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.  அதில் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட … Read more

கொரோனா ​தொற்றினால் உயிரிழக்கும் தபால்துறை ஊழியர்களுக்கு ரூ.10,00,000 நிவாரணம் .!

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.பின்னர் கொரோனா தாக்கம்  தவிரமடைந்ததால் ஊரடங்கு மே3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஊரடங்கு காரணமாக விமானம் , ரயில் பேருந்து சேவைகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்கு ரயில் மற்றும் அவசர விமான சேவைக்கு இயங்கி வருகின்றனர். மத்திய அரசின் பல்வேறு திட்டப்பயனாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் … Read more

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " கொரோனா ஹாட்ஸ்பாட்" என மத்திய அரசு அறிவிப்பு .!

இந்தியா முழுவதும் 11933 பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதால் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டித்தார். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக (ஹாட்ஸ்பாட்) என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தை சார்ந்த சென்னை , திருச்சி ,கோவை ,ஈரோடு ,நெல்லை, வேலூர் திண்டுக்கல் ,விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல் போன்ற 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக (ஹாட்ஸ்பாட்) என மத்திய அரசு … Read more

ஊரடங்கு நீட்டிப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

நாடு முழுவதும் கொரோனாவை தடுப்பற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும், ஏப்ரல் 20-க்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கும் என்று மோடி குறிப்பிட்டிருந்தார். அதன்படி ஏப்ரல் 20 க்கு பிறகு நடைமுறைப்படுத்தும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20க்கு பிறகு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் … Read more