அதிக கட்டணம் வசூலா ? உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள் !

தீபாவளி பண்டிகையொட்டி தனியார் மற்றும் அரசு பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கபட்டால் உடனடியாக கீழே உள்ள நம்பரை அழையுங்கள். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த நம்பரை அழையுங்கள் 18004256151 அரசு பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த நம்பரை அழையுங்கள் 9445014450, 9445014436

தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்த மனு தள்ளுபடி-உயர்நீதிமன்றம்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள பேருந்து கட்டண உயர்வு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், இதில் தலையிட முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இந்த திடீர் உயர்வால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதனை எதிர்த்து இடதுசாரி கட்சிகள், மக்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பலவித போராட்டங்கள், சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

பேருந்து கட்டண உயர்வு குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார்

பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களை பெரிய சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்திடம் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை குறித்து நடிகரும் இசைமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், விவசாயிகளின் கஷ்டத்தை மனதில் வைத்து கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/gvprakash/status/955640929091661824 விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்துகட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் — G.V.Prakash Kumar (@gvprakash) January 23, 2018

அரசு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு…!!

அரசு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.தமிழக அரசு முன்னறிவிப்பின்றி அரசு பேருந்து கட்டண உயர்த்தப்பட்டதாகவும்,அரசின் இந்த முடிவால் தமிழக மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் ஜார்ஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வால் ரயில்களை நாடும் மக்கள்!

  தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், கடந்த 19ஆம் தேதி  முதல் அமலுக்கு வந்தது. மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகளின் கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. அரசு அறிவித்துள்ள விலையுயர்வின்படி கட்டணங்கள் கீழ்கண்டவாறு உயரும்: புறநகர் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.6 ஆக உயர்வு மாநகர குளிர்சாதன பேருந்து குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆக உயர்வு புறநகர் விரைவுப்பேருந்து அதிகபட்ச கட்டணம் ரூ.17 லிருந்து ரூ.24 … Read more