தளபதி படம் பார்க்க போலீசிடம் அடி வாங்கினேன்.! ரகசியம் கூறும் நெல்சன்.!

தமிழ் சினிமாவில், கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான கருத்துக்களை கூறிவருகிறார்கள். நெல்சன் தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம். அவரை சிறிய வயதில் இருந்தே திரையில் பார்த்து ரசித்து விட்டு தற்போது அவரை வைத்து படமே … Read more

ரசிகர்களுடன் அமர்ந்து முதல் ஷோ பார்த்த பீஸ்ட் படக்குழுவினர் ..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல் நாள், முதல் ஷோ காட்சியை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று  மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத், கதாநாயகி பூஜா ஹெக்டே மற்றும் படத்தில் நடித்த சிலர் இணைந்து பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

எனது இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்தார்..! அடுத்து இதுதான் நடந்தது.! – செல்வராகவன்

தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி வருபவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.  இன்று உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று … Read more

பீஸ்ட் படத்திற்காக மொட்டை அடித்து அன்னதானம் வழங்கிய விஜய் ரசிகர்.!

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று அதிகாலை தமிழ்,தெலுங்கு,இந்தி,கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில்  திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள் . ஒரு சில கலவையான விமர்சனங்களை படத்திற்கு வந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில், பீஸ்ட் படம் வெளியானதை முன்னிட்டு, படத்தின் வெற்றிக்காகவும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு … Read more

100 பேருக்கு இலவச பெட்ரோல் – விஜய் ரசிகர் மன்றம் அசத்தல்..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்கு விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தாம்பரத்திலுள்ள விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பீஸ்ட் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் 100 பேருக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

தளபதியின் மாஸ் ஆக்சன் “பீஸ்ட்”.! படம் எப்படி இருக்கு.?! முழு விமர்சனம் இதோ…

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஸ், ஷைன் டாம் சாக்கோ, லிலிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விமர்சனம்: … Read more

பீஸ்ட் கொண்டாட்டம்: தளபதி விஜய்க்கு 4 லட்சத்துக்கு சிலை.! அசத்தும் ரசிகர்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக பேனர்கள் வைத்து திரையரங்குகளின் முன்னாள் நின்று கொண்டு இசை முழங்க ‌பட்டாசுகள் வெடித்து பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் படத்தை பார்க்க காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை பீஸ்ட் வெளியாகி … Read more

#BeastMode:மாஸாக வெளியான “பீஸ்ட்” – ரசிகர்கள் கொண்டாட்டம்!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.ஏற்கனவே படத்தின் 3 பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் அதிக பார்வையாளர்கள் பார்த்தவை என்ற சாதனையை படைத்தது. இந்நிலையில்,விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் எப்போது வெளியாகும் என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று அதிகாலையே  திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது . குறிப்பாக, தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம், … Read more

என்னடா ஒரு ஊரே இருக்கு..? ஷாக்கான தளபதி.! சதீஷ் கூறிய தகவல்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது, இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், சதீஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ, லிலிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, படத்தில் நடித்த அபர்ணா தாஸ் பிறந்த நாள் அன்று விஜய்யிடம் … Read more

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.! சர்ச், கோவில், மசூதி எல்லாம் ஒன்றுதான்.! விஜயின் அசத்தலான பதில்.!

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. பொதுவாக விஜய் நடிக்கும் படங்களுக்கு இசை வெளியிட்டு விழா நடைபெறும். அந்த நிகழ்ச்சியின்போது விஜய் ரசிகர்களுக்கு குட்டி கதை மற்றும் தனக்கு தோன்றும் அரசியல் கருத்துக்களை தைரியமாக பேசிவிடுவார். அவர் பேசும் கருத்துக்கள் சில சமயம் தலைப்பு செய்தியாக மாறிவிடும். இந்தமுறை இசை … Read more