#BeastMode:மாஸாக வெளியான “பீஸ்ட்” – ரசிகர்கள் கொண்டாட்டம்!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.ஏற்கனவே படத்தின் 3 பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் அதிக பார்வையாளர்கள் பார்த்தவை என்ற சாதனையை படைத்தது.

இந்நிலையில்,விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் எப்போது வெளியாகும் என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று அதிகாலையே  திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது . குறிப்பாக, தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல் உலக அளவில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இதனிடையே,சென்னை வெற்றி திரையரங்கில்,இயக்குநர் நெல்சன், நடிகை பூஜா ஹெக்டே,அனிருத் உள்ளிட்டோர் FDFS காட்சியை கண்டு களித்துள்ளனர்.