தளபதியின் மாஸ் ஆக்சன் “பீஸ்ட்”.! படம் எப்படி இருக்கு.?! முழு விமர்சனம் இதோ…

தளபதியின் மாஸ் ஆக்சன் “பீஸ்ட்”.! படம் எப்படி இருக்கு.?! முழு விமர்சனம் இதோ…

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஸ், ஷைன் டாம் சாக்கோ, லிலிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விமர்சனம்:

படத்தில் விஜய் இந்திய ராணுவத்தின் உளவாளியாக இருக்கும் மற்றொரு நாட்டில் தீவிரவாதியை பிடிக்கும் பொழுது தவறுதலாக ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. இதனால், தனது பதவியை ராஜினாமா செய்து வாழ்ந்து வருகிறார். அந்த சமயம் இவர் ஓர் ஷாப்பிங் மாலுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஷாப்பிங் மால்-லை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்ய., அங்குள்ளவர்கள் பிணை கைதிகளாக தீவிரவாதிகளால் கைப்பற்ற படுகின்றனர்.

அங்குள்ள மக்களை விஜய் எப்படி ஒற்றை ஆளாக தன்னுடன் இருப்பவர்களை வைத்து பிளான் செய்து தீவிரவாதிகளை அடித்து தும்சம் செய்து மக்களை காப்பாறுகிறா இல்லையா என்பது தான் படத்தின் கதை.  படத்தின் ஆரம்பத்தில் ஆக்சனில் ஆரம்பித்து, போக போக பின்னர் காமெடி கலந்து இறுதியில் விஜய்க்காக அந்த ஆக்ஷன் கிளைமாக்ஸ் வைத்ததுபோல இருந்தது. படத்தின் பெரிய பிளஸ் விஜய் மற்றும் அனிருத் என்றே கூறலாம்.

இதில் விஜய் ஒவ்வொரு அசை மற்றும் வசனமும், ஆக்ஷன் காட்சிகளில் அவரது ஆக்ரோஷமும், நடன காட்சிகளில் அசால்ட்டான நடனமும் ரசிகர்களை படத்தில் உள்ள குறைகளை மறக்க வைக்கிறது. அதைபோல் தேவைப்படும் இடத்தில் இசையமைப்பாளர் அனிருத் தனது துல்லியமான இசையால் படத்தை எங்கையோ தூக்கி சென்றுவிட்டார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா ஹெக்தே ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார். இருவரது கெமிஸ்ட்ரி படத்தில் பக்காவாக அமைந்துள்ளது. செல்வராகவனும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்துக்கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் படம் பார்க்காத ரசிகர்கள் எதையும் எதிர்பார்க்காமல் திரையரங்கிற்கு சென்றால், இரண்டரை மணி நேரம் நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube