ஆசிய விளையாட்டு போட்டி: 107 பதக்கங்கள்…இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Narendra ModI

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 107 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 19 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆனது கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. … Read more

ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் 2 வெள்ளி பதக்கம் வென்றது இந்தியா!

indian chess team

19வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும்நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆசிய விளையாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 100 பதக்கங்களை கடந்து இந்தியா சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில், தற்போது ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது இந்தியா. அதன்படி, பிலிப்பைன்ஸ்க்கு எதிரான போட்டியில் 3.5 – 0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று வெள்ளியை வென்றது அர்ஜுன் … Read more

ஆசிய கபடி போட்டி… இந்திய அணிக்கு தங்கம்!

Kabaddi team

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு ஆண்கள் கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஈரான் அணிகள் இடையேயான இறுதி போட்டி நடைபெற்றது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்தவகையில், விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஈரான் அணியை 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதனிடையே, இப்போட்டியின் … Read more

Asian Games 2023: மகளிர் ஹாக்கி போட்டி.! இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்று அசத்தல்.!

Hockey

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 14 வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியின் பல பிரிவுகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பல பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று வெண்கலப் பதக்கக்கத்திற்கான மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் … Read more

ஆசிய விளையாட்டு போட்டி.! தங்கம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி!

team india

ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் ருத்ராஜ் தலைமையிலான இந்திய அணி தங்கம் பதக்கம் வென்றுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஆசிய விளையாட்டு தொடரில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதன்படி, நேரடியாக காலியிறுதிக்கு தகுதி பெற்ற ருத்ராஜ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி,  20 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி … Read more

ஆசிய விளையாட்டு போட்டி.! இந்தியா – ஈரான் கபடி இறுதிப்போட்டி நிறுத்தம்.!  

Kabaddi

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று கபடி இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியின் போது நடுவர்களின் தீர்ப்புக்கு எதிராக வீரர்கள் வாதிட்டதால் போட்டி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி..! பேட்மின்டனில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய ஜோடி.!

Badminton

சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த செப்-23ம் தேதி தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் 14 வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர் மற்றும் வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பல பதக்கங்களை … Read more

ஆசிய விளையாட்டு: இந்தியா வரலாற்று சாதனை… மகளிர் கபடி, வில்வித்தை, மகளிர் தனிநபர் பிரிவில் தங்கம்!

asia game india

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று, தங்களது பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 … Read more

கபடியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது..!

Asian Games 2022 kabbadi

கபடியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா 61-14 என்ற கணக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 13வது நாள் இன்று இந்தியா-பாகிஸ்தான் கபடி அரையிறுதி ஆட்டம் மதியம் 12:30 மணிக்கு இந்திய மக்கள் சீனக் குடியரசின் ஹாங்சோவில் உள்ள ஜியோஷன் குவாலி விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா 61-14 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தாய்லாந்து, வங்கதேசம், சீன தைபே, ஜப்பான் ஆகிய அணிகளை … Read more

அம்மாவுக்காக அரைசதத்தை அர்ப்பணித்த திலக் வர்மா..!

#Tilak Varma

இந்தியா இன்று நடைபெற்ற அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சீனாவின் ஹாங்சோவில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் இந்தியாவும் வங்காளதேசமும் மோதின. பங்களாதேஷுக்கு எதிராக திலக் வர்மா 26 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசினார். இப்போட்டியில் திலக் வர்மா தனது அரை சதத்தை அடித்தவுடன் ஜெர்சியை தூக்கி  தனது உடலில் வைத்துள்ள … Read more