சீன வசூலில் ஏமாற்றியதா ஷங்கரின் பிரம்மாண்ட 2.O?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் 2.O. இந்த படத்தை லைகா நிறுவனம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்தது. இப்படத்தில் அக்ஷய் குமார் வில்லனாக நடித்து இருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய மொழிகளில் வெளியாகி சுமார் 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருந்தது. அண்மையில் சீனாவிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. சீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். இப்படம் … Read more

பிகில் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதா தயாரிப்பு நிறுவனம்?!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா, யோகி பாபு, விவேக் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்திலிருந்து ‘சிங்க பெண்ணே’ எனும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல் … Read more

திருச்சி தஞ்சாவூர் ஏரியாக்களில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா?! அசரடிக்கும் தளபதியின் பிகில்!

தளபதி விஜயின் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாலும், பெண்கள் கால்பந்து போட்டியினை பற்றி படம் இருப்பதும், நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு என பல திரை நட்சத்திரங்கள் நடிப்பதாலும் படத்தின் மீது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இதனால் இப்பட வியாபாரம் தற்போது இதுவரை … Read more

நாளை நடக்க உள்ள இசைப்புயல் இசை விழாவில் கலந்துகொள்கிறாரா தளபதி விஜய்?! வெளியான தகவல்கள்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படங்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், ரசிகர்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகளை நேரடியாக நடத்துவதிலும் ஆர்வம் கொண்டவர். இவரது இசை நிகழ்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நாளை சென்னையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தளபதி விஜய், இயக்குனர் அட்லீ மற்றும் பிகில் படக்குழு கலந்துகொள்ள உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நாளை உண்மையிலேயே அனைவரும் வருகிறார்களா என் பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிகில் படத்தின் முக்கிய பைக் காட்சி! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ இதோ!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரத்தில் ஒருவரான தளபதி விஜய் தற்போது பிகில்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளதால் படத்தின் காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தின் ஷாட்டிங் பிரதான சாலையில் விஜய் பைக்கில் செல்வதுபோல காட்சிப்படுத்தப்பட்டது. அந்த ஷூட்டிங் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் ❤ நம்ம ஜனம் வெறித்தனம் ????????@actorvijay … Read more

மீண்டும் தனது நடிப்பு திறமையை காட்ட தயாராகும் விக்ரம்! அடுத்த படத்தில் 25 கெட்டப்கள்!

கடாரம் கொண்டான் படத்தினை அடுத்து சியான் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இவர் இதற்க்கு முன்னர் டிமான்டி காலணி, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். இப்படமும் த்ரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட உள்ளதாம். இப்படத்தில் விக்ரம் 25 வித்தியாசமான கெட்டப்களில் நடிக்க உள்ளாராம். இந்த தகவலை இயக்குனர் அண்மையில் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யாவிற்காக பாடிய செந்தில் கணேஷ்! பிகிலில் பாடியுள்ளாரா?!

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் வென்றவர் கிராமத்து இசை கலைஞர் செந்தில் கணேஷ். அந்த போட்டியில் ஜெயிப்பவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்  பாட வாய்ப்பு உண்டு என கூறிதான் போட்டி நடைபெற்றது. ஆனால் அதற்குள் சார்லி சாப்ளின் 2, விசுவாசம் என சில படங்களில் பாடியுள்ளனர் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி தம்பதியினர். தற்போது செந்தில் கணேஷ், நடிகர்  சூர்யா தற்போது நடித்து வரும் சூரரை போற்று படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் … Read more

ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான சிங்கப்பெண்ணே பாடல்?! வீடியோ உள்ளே!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தினில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். அட்லீ இப்படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான முதல் பாடல் சிங்கப்பெண்ணே எனும் பாடல் வெளியானது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். ஆளப்போறன் தமிழன், சிம்டங்காரன் எனும் பாடல்களை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.ரகுமான் – விவேக் கூட்டணி விஜய் படத்தில் இணைந்துள்ளது. பெண்களை போற்றும் … Read more

தளபதியின் கால்பந்தாட்ட அணியில் உள்ள முக்கிய பிரபலத்தின் மகள்! யார் என்று தெரியுமா?!

தளபதி விஜய் நாடிபில் தீபாவளிக்கு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தினை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே பாடல் ஜூலை 23இல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு போஸ்டரில் விஜய் கோச்சராக இருக்கும் பெண்கள் கபடி டீம் இருந்தது. அதில், நடிகர் ரோபோ சங்கர் மகளும் இருக்கிறார். அவர் நடிப்பது … Read more

தமிழில் மீண்டும் பிஸியான இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்!

ஏ.ஆர்.ரகுமான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ்,ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கர் விருது ,தேசிய திரைப்பட விருது, போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். இந்த வருடம் A R ரகுமான் இசையில் ஜி.வி பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் திரைப்படம் வெளியாகியானது. அதனை அடுத்து தற்போது தளபதி விஜய் -அட்லி கூட்டணியில் … Read more