பிகில் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதா தயாரிப்பு நிறுவனம்?!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா, யோகி பாபு, விவேக் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்திலிருந்து ‘சிங்க பெண்ணே’ எனும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பாலிவுட் போல பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அந்த  விழாவிற்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்து ஒரு விருது வழங்கும் விழா போல நடத்த திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இப்படத்தின் ஷூட்டிங் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.