“30 ஆண்டுகளுக்கு பிறகும் 17.5% தான்: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”-பாமக நிறுவனர் ராமதாஸ் ..!

30 ஆண்டுகளுக்கு பிறகும் மத்திய அரசுப் பணியாளர்களில் வெறும் 17.50 விழுக்காட்டினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது பேரதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக, கடந்த காலங்களில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட பணியிடங்களை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து, சிறப்பு ஆள்தேர்வு மூலம் அவற்றை ஓபிசி வகுப்பினரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். … Read more

“இந்தியாவில் நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன்?” -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி..!

இந்தியாவில் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம்,இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.அந்த வகையில்,நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.மேலும்,நோபல் பரிசு அக்.11 ஆம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது. அதன்படி,நேற்று முன்தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இதனையடுத்து,நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த சியுகுரோ மனாபே,ஜெர்மனை சேர்ந்த கிளாஸ் ஹாசெல்மேன்,மற்றும் … Read more

பாமக தனித்து போட்டி – அரசியல் ரீதியாக இது பெரிய விஷயம் அல்ல – பாமக செய்தி தொடர்பாளர் பாலு

பாமக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே நிர்வாகிகளின் விருப்பம் என பாமக செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தேர்தல் பையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாமக தனித்து போட்டி  உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாமக கட்சியின் உயர்நிலை கூட்டம் நேற்று மாலை நடைபெறுகிறது . அக்கட்சி தலைவர் ஜி.கே … Read more

“பவினா படேலின் வார்த்தைகள்;சாதிக்கத் துடிப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மந்திரம்” -பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து..!

பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவினா படேலின் வார்த்தைகள்,சாதிக்கத் துடிப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மந்திரம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா பென்,உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் ஜோஃவ் யிங்கை எதிர்கொண்டார்.மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சீன வீராங்கனை இந்தியாவின் பவினா பென் படேலை 3:0 (11-7, 11-5, 11-6) என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். … Read more

பாதுகாக்கப்படும் டெல்டா அறிவித்த முதல்வர்க்கு பல்வேறு தரப்பில் வரவேற்பு..!

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் இன்று சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் முதலில் சேலத்தில் வாழப்பாடியில் உள்ள காட்டுவேப்பேரிபட்டியில் புதிய அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.இதன்பின் அம்மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் உடன் கலந்து பங்கேற்றனர். இந்நிலையில் இவ்விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில் காவிரி டெல்டா பகுதிகள் … Read more

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு பணிந்து விடக்கூடாது : ராமதாஸ் ..!

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துவிட்டது. கடந்த மே  22ஆம்  தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். மேலும் தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி … Read more

வருவாயை மறைத்து ஆற்றுமணல் கொள்ளையை மூடி மறைக்க சதி – ராமதாஸ் குற்றச்சாட்டு..!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆற்று மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஆற்று மணல் கொள்ளையை அம்பலப்படுத்த உதவும் புள்ளி விவரங்களை மறைத்திருக்கிறது. மாநில அரசின் இந்த கள்ளத்தனம் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் குவாரிகள் அமைத்து மணல் விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் நீர்ப்பாசனத் துறையின் திட்டச் சாதனைகள் குறித்த … Read more

பலத்த மழை பெய்து வருவதால் காவிரி நீரை பெற நடவடிக்கை தேவை – ராமதாஸ் வலியுறுத்தல்..!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் இயலாமையால், மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்திருப்பதால் கர்நாடக அணைகளின் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி … Read more

துணை செயலாளர்களை நேரடியாக நியமிப்பது அரசை காவிமயமாக்கும் சதி – ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள் நிலையிலான 10 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குடிமைப் பணிகளுக்கு தகுதியான ஆட்களை நியமிப்பதற்காக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த அறிவிப்பு சட்ட விரோதமானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு அறிவித்துள்ள விளம்பரத்தில் 10 இணைச் செயலாளர்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு … Read more