18வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெட் பாத் & பியோன்டின் தலைமை நிதி அதிகாரி!!

பெட் பாத் & பியோண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி குஸ்டாவோ அர்னால், நியூயார்க்கின் புகழ்பெற்ற ஜெங்கா கோபுரத்தின் 18வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். கடந்த புதன்கிழமை பெட் பாத் & பியோண்ட், அதன் பங்குகளில் கிட்டத்தட்ட கால் பகுதியை இழந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் நிறுவனத்தில் 42,000 பங்குகளை $1 மில்லியனுக்கு விற்றதாக கூறப்படுகிறது. பின் அந்நிறுவனம் தோராயமாக 900 கடைகளில் 150 கடைகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. அர்னால் இறப்பதற்கு … Read more

கொரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டு இருந்தாலும், தொண்டு பாதிக்கப்படவில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரிக்கை.  தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது; தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்பட கூடாது என்பதால், என் பணிகளை தொடர்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. பள்ளிகளை வருமான நோக்கத்தில் நடத்தாமல் … Read more

திருவள்ளூர் மாணவி தற்கொலை விவகாரம் – சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவள்ளூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டு, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் வடுக்களே இன்னும் மறையாத நிலையில், திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் மரணத்தை தொடர்ந்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, … Read more

#BREAKING : தொடரும் மாணவர்களின் மரணம் -திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை..!

திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை. கிராம மக்கள் சாலை மறியல்.  கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் வடுக்களே இன்னும் மறையாத நிலையில், திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர்களுடன் இருந்து உணவருந்திவிட்டு சென்னார் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த … Read more

நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் – கமலஹாசன்

நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் என கமலஹாசன் கடிதம்.  தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்களின் மரணம் தொடர்ந்து வருவதாகவும் இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  கமலஹாசன் அவர்கள் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், பொது தேர்வில் தோல்வி, நீட் தேர்வு பயம், பெற்றோர் கண்டிப்பு, ஆசிரியர் அவமதிப்பு, காதல் விவகாரம், வறுமை என தற்கொலைக்கான  காரணிகள் வேறுபட்டாலும் சவால்களை துணிவுடன் எதிர்கொண்டு போராடி வெல்லும் மனவலிமையை நம் பிள்ளைகள் மெல்ல இழந்து … Read more

இனியும் நம் கண்மணிகளின் உயிரை `நீட்’ காவு வாங்குவதை வேடிக்கை பார்க்கலாமா? – மநீம

நீட் பயத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து மனைவி நிஷாந்திக்கு இரங்கல் தெரிவித்து, மநீம ட்வீட்.  அரியலூரைச் சேர்ந்த மாணவி நிஷாந்தி நீட் பயத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதற்கு இரங்கல் தெரிவித்து, மநீம ட்வீட் செய்துள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ‘இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ? நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்! மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால், அரியலூரைச் சேர்ந்த … Read more

நீட் மாணவர்க்கொல்லி என்பதற்கு இது தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும் – அன்புமணி ராமதாஸ்

நீட் மாணவர்க்கொல்லி என்பதற்கு இது தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அரியலூரைச் சேர்ந்த நிஷாந்தி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் அரியலூரைச் சேர்ந்த நிஷாந்தி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து … Read more

அதிர்ச்சி…’ஆக்‌ஷன் ஹீரோ பிஜூவில்’ நடித்த பிரபல மலையாள நடிகர் மரணம்!

மலையாள நடிகர் ND பிரசாத் தனது வீட்டின் வெளியே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத் (வயது 43), ஜூன் 25 அன்று கொச்சினுக்கு அருகிலுள்ள களமசேரியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.இதனையடுத்து, தந்தையின் உடலைக் கண்ட அவரது குழந்தைகள் அக்கம் பக்கத்தினருக்கும்,போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நடிகர் பிரசாத்தின் குடும்பப் பிரச்சனைகள் அவரை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் … Read more

தேர்வு முடிவுகள் என்பது நமது வாழ்வை தீர்மானிப்பவை அல்ல – ஈபிஎஸ்

தேர்வு முடிவுகள் என்பது நமது வாழ்வை தீர்மானிப்பவை அல்ல, மாணவர்கள் நெஞ்சுரம் கொண்டு எதிர்வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என ஈபிஎஸ் ட்விட். நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% … Read more

10, 12-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கள் தொடர் தற்கொலை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு

நடப்பாண்டில் இருந்து பொதுத்தேர்வு முன்பே உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று, 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% … Read more