ஒமைக்ரான் பரவல்:இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

உ.பி:ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்த நிலையில்,இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ளனர்.மேலும்,இந்த உருமாற்றம் அடைந்த வைரஸிற்கு ஒமைக்ரான் … Read more

#Breaking:ஒமைக்ரான் பரவல்;நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!

ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) அமல்படுத்தப்படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நேற்று காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் .அப்போது,ஒமைக்ரான் அச்சுறுத்தலால் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேலும்,இரவு … Read more

தனது பிறந்தநாளில் துப்பாக்கியால் வானத்தில் சுட்ட பெண் மீது வழக்கு பதிவு

பெண் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் தனது வீட்டின் முன் ஒரு குறுகிய தெருவில் சிவப்பு மற்றும் நீல அலங்கார விளக்குகள் எரிகிறது. அப்போது ஒரு பெண் நடனமாடி கொண்டே பொது இடத்தில் கையில் துப்பாக்கியுடன் வானத்தை நோக்கி சுடுகிறார்.  இந்த வீடியோ ட்விட்டரில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோவை அடிப்படையாகக் … Read more

ரூ.9600 கோடி மதிப்பிலான முக்கிய திட்டங்கள்;தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

உத்தரபிரதேசம்:கோரக்பூரில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர்  மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும்,பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். PM Narendra … Read more

கோரக்பூரில் 3 மெகா திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

உத்தரபிரதேசம்:கோரக்பூரில்,எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு உள்ளிட்ட 3 பெரிய நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார். கடந்த திங்கள்கிழமை மாலை கோரக்பூர் வந்தடைந்த யோகி ஆதித்யநாத், பிரதமரின் வருகையை முன்னிட்டு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு … Read more

உபி:குரங்குகளின் தாக்குதல்:2 வது மாடியில் இருந்து குதித்த பாஜக தலைவர் அனில் குமாரின் மனைவி உயிரிழந்தார்..!

உத்தரப் பிரதேசத்தில் குரங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பாஜக தலைவரின் மனைவி உயிரிழந்தார். உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அனில் குமார் சவுகானின்,மனைவி குரங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 50 வயதான சுஷ்மா தேவி, கைரானா நகரில் உள்ள அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார்.அப்போது,அவரை ஒரு குரங்குக் கூட்டம் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.இதனால்,குரங்குகள் … Read more