அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ஆவணங்கள் பறிமுதல்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 16 இடங்களில் ஆவணங்கள் பறிமுதல் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். இந்த சோதனை, நாமக்கலில் 12 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும் மற்றும் ஈரோட்டில் ஒரு இடத்திலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், ஹார்ட் … Read more

#BREAKING: முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது போலீஸ் வழக்கு பதிவு..!

சொத்துக்குவிப்பு புகாரில் தங்கமணி அவரது, மகன் தரணிதரன், அவரது மனைவி சாந்தி மீது நாமக்கலில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை, நாமக்கல், கோவை உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திர மாநிலத்திலிருந்து 2 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக தங்கமணி, … Read more

#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு..!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையத்தில் உள்ள  தங்கமணி வீட்டில் சோதனை நடைபெறுகிறது. மேலும், நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதியில் 69க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துகின்றனர். ஏற்கனவே எம்.ஆர் … Read more

அந்த நேரத்தில் நான் ஊரிலேயே இல்லை..! அமைச்சர் தங்கமணி

அமைச்சர் தங்கமணி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தங்கள் மீது புகார் கூறியிருப்பதாக, தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அப்போலோ மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில், தான் ராசிபுரத்தில் இருந்ததாக கூறினார். அதேபோல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திருவனந்தபுரத்தில் இருந்ததாகவும், அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.