#Breaking:மேகதாது விவகாரம்;அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லிக்கு திடீர் பயணம்!

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில்,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்தபின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.வரும் 23-ஆம் … Read more

#Breaking:”நலமாக இருக்கிறேன்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதன்படி,இன்றும்,நாளையும் முதல்வர் கலந்துகொள்ள இருந்த ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும்,இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,நலமாக தான் உள்ளதாகவும்,பணிகளை தொடர ஆயத்தமாகவுள்ளதாகவும் திமுக தலைவரும்,முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்இது தொடர்பாக முதல்வர் அவர்கள்,கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் … Read more

#Breaking:சற்று முன்…முதல்வருக்கு காய்ச்சல் – அரசு நிகழ்ச்சிகள் ரத்து!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி,நாளை ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,நாளை மறுநாள் முதல்வர் இருந்த திருப்பத்தூர்,வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும்,இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு செய்திக்குறிப்பில்  தெரிவித்துள்ளது.

#FathersDay:”எந்தையை வணங்குகிறேன்;எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்” – முதல்வர் ஸ்டாலின்!

ஓவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில்,மகன்கள்,மகள்கள் தங்களது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தந்தையர் தினமான இன்று தனது தந்தையை நினைத்து வணங்குவதாகவும்,எல்லார் தந்தையரையும் வாழ்த்துவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “அப்பாக்களின் தினம் இன்று! உழைத்து,தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து,அறிவை – ஆற்றலை -அன்பை – பண்பை – வளத்தைத் தந்ததால் … Read more

#Breaking:மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி!

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த வேளையில்,தஞ்சை கல்லணையில் நேற்று ஆய்வு செய்தபின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.வரும் … Read more

பெரும் எதிர்பார்ப்பு!விடுதலை கோரிய நளினி,ரவிச்சந்திரன் வழக்கு – இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

விடுதலை கோரி நளினி,ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி,ரவிசந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடுத்திருந்தனர்.அதன்படி, நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது,உச்சநீதிமன்ற உத்தரவின்படி, விடுதலை செய்ய ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்றாலும், உயர் நீதிமன்றம் கூட பரிசீலிக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும்,அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டு இருந்தாலும் அதை சட்டவிரோதம் என … Read more

3 மாவட்டங்களுக்கு பதக்கங்கள்;20 புதிய மகளிர் காவல் நிலையங்கள் திறப்பு – முதல்வர் ஸ்டாலின் அசத்தல்!

தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய முதல் 3 மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதக்கங்களையும்,சான்றிதழ்களையும் வழங்கினார். அதன்படி,முதல் இடம் பிடித்த கோவை மாவட்டத்துக்கு தங்கப்பதக்கமும், இரண்டாவது இடம் பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வெள்ளிப் பதக்கமும்,3-வது இடம் பிடித்த கரூர் மாவட்டத்துக்கு வெண்கலப் பதக்கமும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.இதனை அந்தந்த … Read more

#Justnow:மாநிலக் கல்விக் கொள்கை – முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில்,சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் உத்தரவிட்டார். அதன்படி,தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும்.உலகளாவிய கல்வி, தேவைக்கேற்ப வளரும் இளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக்கொள்கையை … Read more

இன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தரம் உயர்வு ஓப்பந்தம் – துறை வாரியாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது. அதன்படி,சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகிறது. இதனைத் தொடர்ந்து,இன்று முதல் ஒவ்வொரு துறை வாரியாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.அதன்படி,இன்று … Read more

#Breaking:மேகதாது அணை விவகாரம் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசரக் கடிதம்!

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக அரசுக்கு ஆலோசனை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணைகட்டும் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில்,உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து … Read more