நளினி இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை!

நளினி விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சிறைத்துறை தகவல். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேர் நன்னடத்தை, சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறை, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் விடுதலை செய்ய நேற்று  உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்த நிலையில், நளினி விடுதலை தொடர்பான … Read more

தன் மீது மத்திய சட்டத்தின் கீழ் வழக்குகள் இல்லை.! இந்த விடுதலை மகிழ்ச்சி தருகிறது.! நளினி பேட்டி.!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரையும் விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நளினி மகிழ்ச்சி.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளித்தது. இதனையடுத்து, தங்களையும் பேரறிவாளனை போலவே விடுதலை செய்ய வேண்டும் என நளினி, ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த நிலையில், அவர்களையும் இன்று விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை … Read more

#BREAKING: இந்த தீர்ப்பு ஒரு ஆதாரம்! 6 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர் அறிக்கை!

மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது திமுக அரசுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நளினி உள்பட 6 பேர் விடுதலைக்கு தமிழக … Read more

#BREAKING: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். நளினி, ராமச்சந்திரன் மனுக்களை விசாரித்த பிஆர் காவாய் தலைமையிலான உச்சநீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு … Read more

நளினி உள்ளிட்ட 5 பேர் விடுதலை – நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு விடுதலைக்கோரும் 5 பேரின் வழக்கு மீது நாளை விசாரணை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த பதில் மனுவில் ஏழு பேர் விடுதலையில் குடியரசு தலைவர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றமே விடுவித்ததை போலவே, நளினி, ரவிச்சந்திரன் விடுதலை … Read more

#BREAKING: நளினி, ரவிச்சந்திரன் விடுதலை விவகாரம் – நீதிமன்றமே முடிவெடுக்கலாம்!

நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்கக்கோரும் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு பதில். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை கைதிகளாக நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஏழு பேர் விடுதலையில் குடியரசு தலைவர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாகவும், பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றமே விடுவித்ததை போலவே இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் எனவும் பதில் மனுவில் தமிழக அரசு … Read more

#BREAKING: நளினி வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு … Read more

முன்கூட்டியே விடுதலை?.. நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு 26-ல் விசாரணை!

முன்கூட்டியே விடுவிக்கக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு 26-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்தனர். இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. இது தொடர்பாக சட்டசபையிலும் … Read more

#BREAKING: விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு!

பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி நளினி மனு தாக்கல். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். விடுதலை தொடர்பாக விசாரணை நடந்து முடியும் வரை இடைக்காலமாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் நளினி தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி நளினி மனு தாக்கல் செய்திருக்கிறார். சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருந்த … Read more

#BREAKING: முருகன் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவு. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேலூர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் கூறியதால் வேலூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த, 2020-ல் சிறையில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக முருகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more