கேப்டன் விஜயகாந்த் மறைவு வேதனையா இருக்கு! கண்ணீர் விட்ட பேசிய நளினி!

nalini about vijayakanth

கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சென்னை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி எழுதினார்கள். குறிப்பாக ரஜினிகாந்த், ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், விஜயகாந்துடன் பல … Read more

ராஜீவ் கொலையில் உண்மை குற்றவாளி யார் என தெரியாது.! கணவரை சந்தித்த பின் நளினி பேட்டி.!

ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். – நளினி தகவல்.  முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலைவழக்கில் சிறையில் இருந்து அண்மையில் வெளியான நளினி, திருச்சி முகாமில் இருக்கும் தனது கணவர் முருகனை இன்று சந்தித்து விட்டு வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘ ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். … Read more

கூட்டணி வேறு.! கொள்கை வேறு.! திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.! காங்கிரஸ் தலைவர் பேட்டி,!

திமுக – காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு. திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்த்தில் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையை அடுத்து, நளினி உள்ளிட்ட 6 பேர் சனிக்கிழமை விடுதலை ஆகினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துக்களை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சென்னை கிண்டியில் சந்தித்து குறிப்பிட்டார். அதில், ‘ ராஜீவ் … Read more

என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி.! – விடுதலையான நளினி மகிழ்ச்சி.!

இத்தனை வருடங்கள் என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி என விடுதலையான நளினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேர் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் மகளிர் தனிசிறையில் இருந்த நளினி இன்று விடுதலையானார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இஇதனை வருடம் என்னை மறக்காமல் இருந்த தமிழ் … Read more

பெரும் எதிர்பார்ப்பு!விடுதலை கோரிய நளினி,ரவிச்சந்திரன் வழக்கு – இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

விடுதலை கோரி நளினி,ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி,ரவிசந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடுத்திருந்தனர்.அதன்படி, நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது,உச்சநீதிமன்ற உத்தரவின்படி, விடுதலை செய்ய ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்றாலும், உயர் நீதிமன்றம் கூட பரிசீலிக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும்,அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டு இருந்தாலும் அதை சட்டவிரோதம் என … Read more

#Breaking:நளினிக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிப்பு- தமிழக அரசு உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினி அவரது தாயார் பத்மாவின் உடல் நிலையை காரணம் காட்டி 30 நாள் பரோலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி வெளியே வந்தார்.அதன்பின்னர்,நளினிக்கு இதுவரை 3 முறை பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில்,முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு 4-வது முறையாக மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டித்து … Read more

#Breaking:7 பேர் விடுதலை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

சென்னை:ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக விளக்கம் தேவை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத … Read more

#Breaking:ஆயுள் கைதிகள் விடுதலை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

சென்னை:ஆயுள் கைதிகள் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆயுள் கைதிகள் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ரவிச்சந்திரன் சிறைதண்டனை பெற்று வரும் … Read more

நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிப்பு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தார் நளினியின் பரோல் கடந்த மாதம் நீட்டிக்கப்பட்டது.  ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மேலும் மாதம் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. நாளையுடன்  பரோல் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கடந்த டிசம்பர் 27-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் … Read more

நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மீண்டும் 30 நாள் பரோல் நீட்டிப்பு. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மீண்டும் 30 நாள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஜனவரி 27-ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கடந்த டிசம்பர் 27-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை … Read more