#Breaking:மேகதாது அணை விவகாரம் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசரக் கடிதம்!

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக அரசுக்கு ஆலோசனை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணைகட்டும் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில்,உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து … Read more

கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் நம் ஒற்றுமையை உணர்த்த வேண்டும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

மேகதாது அணை கட்டப்பட்டால் நமது விவசாயிகளின் நிலை மோசமானதாக மாறும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை. கர்நாடக மேகதாது அணை தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஒருமனதாக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே, இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் … Read more

#Breaking: மேகதாது அணை – முதல்வர் தலைமையில் தொடங்கியது அனைத்துக்கட்சி கூட்டம்.!

மேகதாது அணை குறித்து விவாதிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சிகளின் கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் நலனை காக்க அனைத்து தரப்பினரின் கருத்தை பிரதிபலிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் … Read more