150 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை!

இந்தியா முழுவதும் சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் நடைபெறும் இடங்கள் என சிபிஐ தரப்பு சந்தேகிக்கும் இடங்களில் தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இனிதான் அது எந்தெந்த இடங்கள், யாருக்கு சொந்தமான இடங்கள், ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் ஏதும் சிக்கியதா என தெரியவரும்.

1.2 ஆயிரம் கோடி கடன் இதுவரை வசூல் செய்யப்பட்டுள்ளது! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

மத்திய நிதியமைச்சர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிப்பிட்டு பேசினார். வங்கித்துறை சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீரவ் மோடி போன்ற மோசடி பேர்வழிகள் இனி உருவாக மாட்டார்கள். நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் இனி பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். 1.2 லட்சம் கோடி வாராக் கடன் மத்திய அரசால் வசூல் செய்யப்பட்டுள்ளது.  வங்கிகளின் வாராக்கடன் 7.9 லாட்ச்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 250 கோடிக்கு அதிகமாக கடன் வாங்கியவர்களை … Read more

வருடாவருடம் வளர்ந்து கொண்டே இருக்கும் சூர்ய விநாயகர்! இந்த வருடம் எத்தனை அடி?

வரும் திங்கள் அன்று நாடு முழுவதும், ஆவனி மாதம் வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  இந்த விழாவை கொண்டாட பக்தர்கள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இதற்கான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். அங்கு லால்பாக்ஷா விநாயகர் மிகவும் பிரபலமானவர். அதேபோல ஹைதராபாத்தில் கைராபாத் விநாயகர் மிகவும் பிரபலமானவர். அங்கு செய்யப்படும் சிலை வருட வருடம் உயரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. … Read more

காஞ்சிபுரம் அருகே கண்டறியப்பட்ட வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன!

கடந்த ஞாயிற்று கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம், அனுமந்தபுரம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில், ராணுவ பயிற்சிகாக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சில செயல் இழந்தும் செயல் இழக்காமலும் இருந்துள்ளது. இதனை அங்குள்ள இளைஞர்கள் எடுக்கையில் அவை வெடித்து சிதறின. இதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் நேற்று இந்த இடத்தில் 10 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டன. அதில் சில செயல் இழந்தும், சில செயல் இழக்காமலும் கிடைத்துள்ள்ளன. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அடுத்து … Read more

பழனியில் பஞ்சாமிர்த கடைக்கு சீல்..! 8 மணி நேர சோதனை..! வரி ஏய்ப்பு அம்பலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற  பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் சித்தனாதன் பஞ்சாமிர்த கடை உள்ளது இங்கு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் விற்பனை செய்து வந்தது.இந்நிலையில் அந்த கடையில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக  வருமானவரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் சோதனை முடிவில் புகார் உறுதியானதை அடுத்து வருமானவரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடைக்கு  சீல் வைத்துள்ளனர்.  

ஃபேஸ்புக்கில் கூடா நட்பு பத்தாம் வகுப்பு மாணவியின் உயிரை காவு வாங்கியுள்ளது!

ஃபேஸ்புக்கில் கூடா நட்பு பத்தாம் வகுப்பு மாணவியின் உயிரை பறித்துள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த நவீன் ரெட்டி என்பவர் மகபூப்நகர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை பேஸ்புக் மூலம் கண்டறிந்து அவருடன் பேஸ்புக்கில் பழகி வந்துள்ளார். பின்னர், இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். சங்கராயபள்ளி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நவீன் ரெட்டி … Read more

காஞ்சிபுரம் பகுதியில் 10 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா பகுதிக்கு உட்பட்ட அனுமந்தபுரம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த குண்டுகள் பாதி வெடித்தும் பாதி வெடிக்காமலும் கிடைக்கப் பெற்று உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இது குறித்து விசாரிக்கையில், குறிப்பிட்ட அனுமந்தபுரம் ஏரிப்பகுதி பகுதியில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் பகுதியாகும் இங்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதுபோல பயிற்சி நடைபெறும். அந்த பயிற்சி நடைபெற்று முடிந்த பின்னர், இது … Read more

தமிழகத்தை தொடர்ந்து புதுசேரியிலும் பால் விலை கிடுகிடு உயர்வு!

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 4 ரூபாய் அதிகரித்தும், பால் விற்பனை விலை 6 ரூபாய்அதிகரிதும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதேபோல் தற்போது புதுச்சேரியிலும் பால் கொள்முதல் விலையும் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் விலையானது ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் அதிகரித்தும்,  பால் விற்பனை விலையானது ஆறு ரூபாய் அதிகரித்தும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விலையேற்றம் இன்று இரவு 12 மணி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நாளை காலை இந்த விலையேற்றம் … Read more

தண்டவாளத்தில் இருந்து 40 கொக்கிகள் அகற்றம்! ரயிலை கவிழ்க்க சதி?!

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே,  உள்ள தண்டவாளத்தில் உள்ள கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொக்கிகள் தண்டவாளத்திற்கும் கான்க்ரீட் தளத்திற்கும் இடையே பொருத்தப்பட்டிருக்கும். இந்த கொக்கிகள் அகற்றினால், ரயில் வரும் வேகத்திற்கு ரயில் கவிழ்ந்து விடும். இங்கு 40 கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சோதனை நடித்தி வருகின்றனர். இந்த ரயில் தடத்தில் ஒரு கிமீ தூரத்திற்கு ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்காது. அதனை அறிந்து கொண்டு சில விஷமிகள் … Read more

காஷ்மீர் செல்ல மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் அனுமதி!

காஷ்மீர் மக்கள் அனைவரும் நாட்டு மக்கள் அனைவருடனும் தொடரில் இருப்பது அவசியம். ஆதலால், மாக்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெய்ச்சூரி ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர் அங்கு தனது கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்திக்க வேண்டும். மாற்றாக அங்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என கூறி உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட … Read more