#Breaking:சிபிஎம் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு

கண்ணூர்: சிபிஎம் கட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக வழிநடத்தும் முக்கிய பொறுப்பு சீதாராம் யெச்சூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணூரில் நடந்த சிபிஐ (எம்) 23வது அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 85 பேர் கொண்ட மத்திய குழுவின் முதல் கூட்டத்தின் மூலம் சீதாராம் யெச்சூரி பொதுச் செயலாளராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

பெட்ரோல், டீசல் வரிகளை ஏற்றி ரூ.4.55 லட்சம் கோடி கொள்ளை – சீதாராம் யெச்சூரி

பெட்ரோ பொருட்கள் மீதான மத்திய வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி ட்வீட். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர்  சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல் வரிகளை ஏற்றி மக்களிடமிருந்து 4.55 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கொள்ளை அடித்துள்ளது என்று குற்றசாட்டியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு ரூ.3.34 லட்சம் கோடியில் இருந்து 36% அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களின் வருவாய் தேக்கம் … Read more

சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி மரணம்…! ட்வீட்டரில் கிண்டலாக பதிவிட்ட பாஜக தலைவர்…!

சீனாவின் ஆதரவாளர் சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி சீன கொரோனா காரணமாக காலமானார். சிபிஐஎம் தலைவர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி வியாழக்கிழமை அன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் அரசியல் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் பாஜக தலைவர் மிதிலேஷ் திவாரி அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு … Read more

யெச்சூரி மகன் மறைவு.., பிரதமர் மோடி இரங்கல்..!

மகனை இழந்து வாடும்  சீதாராம் யெச்சூரி ஜி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி என மோடி தெரிவித்துள்ளார்.  சீதாராம் யெச்சூரி மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹோலி குடும்ப மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் தான் குர்கானுக்கு மாற்றப்பட்டார். இரண்டு வரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி … Read more

கொரோனாவால் உயிரிழந்த சீதாராம் யெச்சூரியின் மகன் – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவால் உயிரிழந்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். 34 வயதான ஆஷிஷ், மூத்த நகல் ஆசிரியர், புதுதில்லியில் ஒரு முன்னணி செய்தித்தாளில் பணிபுரிந்து வந்துள்ளார்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ஆஷிஷ் யெச்சூரி. ஆரம்பத்தில் அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹோலி குடும்ப மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார், பின்னர் … Read more

#BigBreaking:சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவுக்கு பலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவால் காலமானார். 34 வயதான ஆஷிஷ், மூத்த நகல் ஆசிரியர், புதுதில்லியில் ஒரு முன்னணி செய்தித்தாளில் பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ஆஷிஷ் யெச்சூரி. ஆரம்பத்தில் அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹோலி குடும்ப மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார், பின்னர் குர்கானுக்கு மாற்றப்பட்டார். இரண்டு வார காலமாக சிகிச்சை பெற்று … Read more

காஷ்மீர் செல்ல மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் அனுமதி!

காஷ்மீர் மக்கள் அனைவரும் நாட்டு மக்கள் அனைவருடனும் தொடரில் இருப்பது அவசியம். ஆதலால், மாக்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெய்ச்சூரி ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர் அங்கு தனது கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்திக்க வேண்டும். மாற்றாக அங்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என கூறி உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட … Read more

காஷ்மீரில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தம்!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அரசு மசோதாவை கடும் அமளிகளுக்கு இடையே நிறைவேற்றியது. இதனை தொடர்ந்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனால், காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. காஷ்மீரில் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இதனால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கூட காஷ்மீருக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், … Read more

மோடி அரசின் பொருளாதார கொள்கைகளினால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது – சீதாராம் யெச்சூரி

மக்களின் மேல் சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மோடி அரசின் பொருளாதார கொள்கைகளினால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் , மக்களின் மேல் சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு .மோடி அரசின் பொருளாதார கொள்கைகளினால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது ஜனநாயகத்தின் கோயில் நாடாளுமன்றம். அதில் முறையாக … Read more

நெல்லையில் 12 அடி உயர லெனின் சிலையை திறந்து வைத்த சீத்தாராம் யெச்சூரி

நெல்லையில் லெனினின் 12 அடி உயர வெண்கலச் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி திறந்து வைத்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பின் திரிபுராவில் லெனின் சிலையை அடித்து நொறுக்கினார்கள். இதற்கு பதிலடியாக திரிபுராவில் வீழ்ந்தது , நெல்லையில் எழுகிறது என்ற வாசகத்துடன் நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 12 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று மாலை இந்தச் சிலையை திறந்து … Read more