பங்குச்சந்தை வீழ்ச்சி..! சென்செக்ஸ் 326 புள்ளிகள் சரிந்தது..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 326 புள்ளிகள் குறைந்து 58,962  ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,303 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தக நாளில் 59,346 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 326 புள்ளிகள் அல்லது 0.55% என குறைந்து 58,962 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 88.75 புள்ளிகள் அல்லது 0.51% குறைந்து 17,303 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. சென்செக்ஸில் லாபம் மற்றும் … Read more

#BREAKING: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை. தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து துறை செயலாளர்களுக்கும் நிதித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது, புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப தமிழ்நாடு நிதித்துறை அதிரடியாக … Read more

பிரதமர் மோடியுடனான சாகச பயணம்..! புகைப்படத்தை பகிர்ந்த பியர் கிரில்ஸ்..!

பிரதமர் மோடியுடனான மழைக்காட்டில் சாகச பயணம் செய்த புகைப்படத்தை பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரும் பிரிட்டிஷ் சாகசக்காரருமான பியர் கிரில்ஸ், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலக தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற மேன் Vs வைல்ட் என்ற பிரபலமான நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸூடன் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் பிரதமர் நரேந்திர மோடி ஈரமான வனப்பகுதி வழியாக நடந்து சென்று பியர் கிரில்ஸ் உடன் இணைந்து … Read more

கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

கார் மோதி உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு. கார் மோதி மாணவர்கள் உயிரிழப்பு: வாணியம்பாடி அருகே கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். வளையம்பட்டு பகுதியில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றபோது மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. கார் மோதியதில் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் ரபீக், விஜய், சூர்யா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த நிலையில், கார் மோதி உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பத்துக்கு … Read more

காவல் ஆணையர் அலுவலக அதிகாரிக்கு சிறைத்தண்டனை விதிப்பு!

காவல்துறை அதிகாரி அசோக்குமாருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. காவல் அதிகாரி லஞ்சம்: ரூ.2000 லஞ்சம் பெற்ற வழக்கில் சென்னை காவல் ஆணையர் அலுவலக அதிகாரி அசோக் குமாருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2003-ல் விடுப்பு கடிதம் தராமல் இருந்த எழும்பூர் எஸ்ஐ சண்முகத்தின் ஊதியத்தில் மாதம் ரூ.500 பிடித்தம் செய்துள்ளார். மேல்முறையீடு: மாதம் ரூ.500 வீதம் ஊதியத்தில் பிடித்தம் செய்து எஸ்ஐ சண்முகத்துக்கு 2008-ல் … Read more

அஜித்துக்கு பிளாக்பஸ்டர்…உலக முழுவதும் “330 கோடி” வசூலை கடந்த ‘துணிவு’.!

உலக அளவில் 330 கோடி வசூலை அஜித்தின் துணிவு திரைப்படம் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “துணிவு” இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கோக்கன், ஜி. எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தை போனிகபூர் தயாரிக்க , படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருந்தார். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் … Read more

மார்ச் 20 பட்ஜெட் தாக்கல்.! தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் 2ம் தேதி ஆலோசனை!

2023-24-ம் ஆண்டிற்கான பட்ஜெட் 20ம் தேதி தாக்கலாக உள்ள நிலையில், நிதியமைச்சர் ஆலோசனை. 2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என சபாநாயகர் அறிவித்திருந்தார். தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் சட்டப்பேரவையில் யார் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் குறித்து தொழில் … Read more

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை – அமைச்சர்

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த மாநாட்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க ஐடி துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த மாநாட்டில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், சைபர் கிரைம் தொடர்பான பிரச்சனைகளில் பெண்கள் புகார் அளிக்க முன் வர வேண்டும் என்றும் இந்திய கல்விமுறை சமூக அக்கறையை கொடுக்காததால் பள்ளிகளில் … Read more

செயற்கை நுண்ணறிவு கல்வி, விவசாயம், சாமானிய மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும்..! பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு கல்வி, விவசாயம், சாமானிய மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.  பிரச்சனைகளை தீர்க்கும் : மேம்படுத்தப்பட்டு வரும் 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) போன்ற தொழில்நுட்பங்கள் மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் பல துறைகளை மாற்றும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி சாமானிய மனிதர்கள் எதிர்கொள்ளும் 10 சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியும் என்று கூறினார். நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பு : 21 … Read more

சிசோடியா கைது.! 2024இல் வட்டியும் முதலுமாக திரும்ப கிடைக்கும்.! திமுக எம்பி டி.ஆர்.பாலு கண்டனம்.!

சிசோடியா கைது நடவடிக்கை போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்பார்கள். – திமுக எம்பி டி.ஆர்.பாலு கண்டனம்.  டெல்லி துணை முதல்வரும், டெல்லி நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா கடந்த ஞாயிற்று கிழமை இரவு சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். டெல்லில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிசோடியா கைது : இதனை அடுத்து, நேற்று அவரை டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, … Read more