செயற்கை நுண்ணறிவு கல்வி, விவசாயம், சாமானிய மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும்..! பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு கல்வி, விவசாயம், சாமானிய மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பிரச்சனைகளை தீர்க்கும் :

மேம்படுத்தப்பட்டு வரும் 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) போன்ற தொழில்நுட்பங்கள் மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் பல துறைகளை மாற்றும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி சாமானிய மனிதர்கள் எதிர்கொள்ளும் 10 சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியும் என்று கூறினார்.

PM MODI BJP
[File Image]
நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பு :

21 ஆம் நூற்றாண்டின் மாறிவரும் இந்தியா, 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான இலக்கை அடைய, குடிமக்களை தொழில்நுட்பத்தின் சக்தியால் தொடர்ந்து மேம்படுத்துகிறது. தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசு பெரிய அளவில் முதலீடு செய்து வருவதாகவும் இந்தியாவில் நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதாகவும் கூறினார்.

ஒரு நாடு ஒரு ரேஷன் :

முன்பு வரி தொடர்பான புகார்கள் மிக அதிகமாக இருந்ததால், வரி செலுத்துவோர் பல வழிகளில் துன்புறுத்தப்பட்டனர். அதனால்தான் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒட்டுமொத்த வரிச் செயல்முறையையும் முகமற்றதாக்கியுள்ளோம். இந்த தொழில்நுட்பம் ஒரு நாடுஒரு ரேஷன் என்ற அடிப்படையை உருவாக்கியது. இதன் காரணமாக கோடிக்கணக்கான ஏழைகள் வெளிப்படைத்தன்மையுடன் ரேஷன் பெறுவது உறுதி செய்யப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கை எளிதாகிறது :

இன்று அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முடிவுகளின் நேர்மறையான விளைவு அது மிகவும் தேவைப்படும் எல்லா இடங்களிலும் தெரிகிறது. எங்கள் முயற்சிகள் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது. மேலும் இன்று மக்கள் அரசாங்கத்தை ஒரு தடையாகக் கருதவில்லை. மாறாக, புதிய வாய்ப்புகளுக்கான ஊக்கியாக நமது அரசாங்கத்தை மக்கள் பார்க்கின்றனர் என்று கூறினார்.

Leave a Comment