முன்னாள் ஆளுநர் காலமானார்..!

குஜராத் முன்னாள் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி காலமானார்  குஜராத் மாநில முன்னாள் ஆளுநர் கவர்னர் ஓம் பிரகாஷ் கோலி தனது 87 வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று புது டெல்லியில் நடைபெற உள்ளது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, டெல்லியில் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். பொதுமக்கள் நலனிலும் அவர் கவனம் செலுத்தினார் என்று ட்வீட் செய்துள்ளார். Saddened by the passing away of Shri OP … Read more

விதிமுறைகளை மீறிய 8 கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி..!

விதிமுறைகளை மீறியதற்காக 8 கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), வங்கிகளின் சில விதிகளை மீறியதற்காக எட்டு கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. விதிகளை மீறிய வங்கிகளில் புனே மக்கள் கூட்டுறவு வங்கி, இளைஞர் மேம்பாட்டு கூட்டுறவு வங்கி, ஜல்கான் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஜிலா சககாரி கேந்திரிய வங்கி மரியடிட், உஸ்மானாபாத் ஜனதா சககாரி வங்கி, தி வைஜாபூர் வணிகர்கள் கூட்டுறவு வங்கி, சதாரா சககாரி வங்கி … Read more

ஆஸ்திரேலியாவிற்கு மேலும் பின்னடைவு; ஜோஷ் ஹேசல்வுட் விலகல்.!

பார்டர்-கவாஸ்கர் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்குள் நுழைய, இந்திய அணிக்கு  மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெல்ல … Read more

புதுச்சேரியில் 2 காவலர்கள் தற்கொலை – காவலர்களுக்கு கவுன்சிலிங் தர உத்தரவு..!

புதுச்சேரியில் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவலர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்குமாறு காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவு. புதுச்சேரி மடுக்கரை இந்திரா நகரை சேர்ந்தவர் மலையராஜ். இவர் கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். காவலர் தற்கொலை  இவர் கடந்த எட்டு வருடங்களாக இவர் சக்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், காலில் ஏற்பட்ட புண் ஆறாமல் மீண்டும் மீண்டும் வலியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் … Read more

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்.. 3 பேர் உயிரிழப்பு! 200க்கும் மேற்பட்டோர் காயம்!

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி. மீண்டும் நிலநடுக்கம்: துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வு இஸ்ரேலிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளிலும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், குடியிருப்பாளர்கள் சிக்கியதாகவும், பலர் … Read more

சர்வதேச தாய்மொழி தினம்; தமிழ்மொழி குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட்.!

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது ட்வீட்டில், தமிழ்மொழி குறித்து பெருமிதம். இன்று பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தாய்மொழி தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், தாய்மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம்,உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம் என்று பெருமிதமாக கூறியுள்ளார். மேலும் பழமையான நம் தமிழ் மொழி காலத்துக்கேற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ளும் தன்மையுடைய மொழி எனவும், அத்தகைய தமிழ் மொழியைக் … Read more

ராமநாதபுரத்தில் நடுக்கடலில் கவிந்த நாட்டு படகு – மூன்று பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் நடுக்கடலில் நாட்டுப்படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு.  ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில்  குலதெய்வ வழிபாட்டுக்கு பின் அனுமதி இன்றி நாட்டுப் படகில் சவாரி மேற்கொண்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நாட்டுப் படகு கடலில் மூழ்கியுள்ளது. இதில் இருளாயி, மணிமேகலை மற்றும் முத்துமணி ஆகியோ ர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல் இலந்தை கூட்டம் கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளது. கடலில் நாட்டு படகு  கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் … Read more

தோனியுடன் 15 ஆண்டுகள் நிறைவு; கொண்டாடும் சிஎஸ்கே.!

ஐபிஎல்இல் தோனி, சிஎஸ்கே அணியுடன் இணைந்து 15 ஆண்டுகள் முடிந்ததை சிஎஸ்கே தனது ட்விட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு கொண்டாடியுள்ளது. ஐபிஎல் 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து சிஎஸ்கே அணிக்கு தலைமை வகித்து வரும் மகேந்திரசிங் தோனி, அணியுடன் இணைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது ட்விட்டரில் தோனியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனிக்கு, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தான் கடைசி தொடராக இருக்கும் … Read more

உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது.. 1000 ரூபாய் உதவி தொகை இன்னும் 5 மாதத்திற்குள்… அமைச்சர் உதயநிதி உறுதி.!

இன்னும் 5 மாதத்திற்குள் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்தார்.  ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் இ,வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில், அதிமுக பற்றியும், பாஜக பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். 1000 ரூபாய் : அப்போது  பிரச்சாரத்தின் போதே, உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது.. அந்த 1000 … Read more

இந்தாண்டு தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த ‘டாப் 3’ படங்கள்.!

இந்த வருடம் ஜனவரி தொடங்கி பிப்ரவரி மாதம் முடியப்போகும் நிலையில், தமிழ் சினிமாவில் இந்த இரண்டு மாதத்தில் பல படங்கள் வெளியாகி சில படங்கள் விமர்சன ரீதியாகவும், சில திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் அதிகம் வசூல் செய்த டாப் 3 படங்கள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 3 படங்கள்  … Read more