கல்வி உதவித்தொகை 10 நாட்களில் கிடைக்கும்:ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் ராஜலட்சுமி

சென்னை: “சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கான, கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களில், கல்லுாரிக்கு கிடைத்து விடும்,” என, ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., – அரசு: ஜாதி வேறுபாடுகளை களைவதற்காக, தி.மு.க., ஆட்சியில், சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டத்தை, இந்த அரசு ஏன் கைவிட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். தீ விபத்தில் காயமடைந்தோருக்கு, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. இதை, 50 ஆயிரம் ரூபாயாக … Read more

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இலங்கை அணி சாதனை வெற்றி!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-வது இன்னிங்ஸில் அதிக ரன்களைத் துரத்திப் பிடித்து அந்த அணி புதிய சாதனை படைத்தது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் அந்த அணி 3-2 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் … Read more

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய மன்ப்ரீத் கவுர் : பதக்கம் பறிக்கப்பட வாய்ப்பு

புதுடில்லி : சமீபத்தில் நடந்த ஆசிய தடகள போட்டியில் இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்ப்ரீத் கவுர் தங்கம் வென்றார்.இந்நிலையில் சமீபத்தில் ஊக்கமருந்து சோதனை நடந்தது. அப்போது மன்ப்ரீத் கவுர் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டது தெரிய வந்துள்ளது. பட்டியாலா பெடரேசன் கப் சார்பில் ஜூன் 1 முதல் 4 வரை நடந்த சோதனையின் போது மன்ப்ரீத் தோல்வியடைந்தார். இதனால் ஆசிய தடகள போட்டியில் அவர் வென்ற தங்கப் பதக்கம் பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி … Read more

தூத்துக்குடி அணிக்கு தடை! -டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்….

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 2-வது சீசனில் விளையாட நடப்பு சாம்பியனான தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கு இடைக்கால தடை விதித்து, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2-வது சீசன் போட்டிகள் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில்  தூத்துக்குடி … Read more

கர்நாடகாவுக்கு மத்திய அரசு “கொட்டு” வைத்தது-தனிக்கொடி கேப்பியா?

கர்நாடக மாநிலத்துக்கு என தனிக் கொடியை உருவாக்குவதற்கு மாநில அரசு குழு அமைக் கப்பட்டுள்ள‌ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசமைப்பு சட்டம் 370-ன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், அம் மாநிலத்திற்கு என தனியாக கொடி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவில் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக கன்னட அமைப் பினர் மஞ்சள் சிவப்பு வண்ண கொடியை மாநில கொடியாக‌ பயன்படுத்தி வருகின்றனர். தொடக்கத்தில் வாட்டாள் நாக ராஜ், நாராயண … Read more

விவசாயிகளுக்காக போராடினால் குண்டர் சட்டத்தில் கைது செய்வதா?-சேலம் வளர்மதியின் பெற்றோர் கொந்தளிப்பு!

என்னுடைய மகள் அரசுக்கு எதிராக போராடவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடாது என்றுதான் போராடினார். இதற்காக, மாணவி என்றும் பாராமல் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்தது எங்கள் குடும்பத்துக்கு மன உளைச் சலை ஏற்படுத்தி உள்ளது” என்று  வளர்மதியின் தந்தை மாதையன் கூறியுள்ளார். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் போராடும் மக்களுக்கு ஆதரவு தரக்கோரி, சேலத்தில் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டுப் பிரசுரம் விநியோ கித்த வளர்மதி(23) தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், … Read more

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸிடம் ஆதரவு கோரினார் மோடி

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற் கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்நிலையில், குடியரசு துணைத் தலைவருக் கான வேட்பாளரை பாஜக நேற்று முன்தினம் மாலை அறிவித்தது. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக முதல்வர் கே.பழனிசாமியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி துணை குடியரசுத்தலைவர் வேட்பாள ருக்கு ஆதரவு கோரினார். இது தொடர்பாக நேற்று அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘‘பிரதமர் மோடி, … Read more

+ 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காதது ஏன்? – அமைச்சர் விளக்கம்

நீதிமன்ற தடை இருப்பதால் கடந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, ‘‘தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனால், ஏழை மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அவர்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். அவருக்குப் பதிலளித்த அமைச் … Read more

கோவாவில் மாட்டிரறைச்சிக்கான கட்டுபாடுகள் குறைப்பு…!

பனாஜி:கோவாவில் மாட்டு இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் தேவைப்பட்டால் பெல்காம் போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் என முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். கோவா சட்டசபையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மனோகர் பாரிக்கர். “கோவாவில் மாட்டு இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை. தேவைப்பட்டால் பெல்காம் அல்லது வேறு எங்கிருந்தாவது வரவழைக்கப்படும். மேலும் வரவழைக்கப்படும் மாட்டு இறைச்சி முழுமையான பரிசோதனைக்குப் பின்பே வரவழைக்கப்படும்” எனக் கூறினார். இந்த செய்திய டிவிட்டரில் ஏ என் ஐ செய்தி நிறுவனம் … Read more

வேலூரில் கல்லூரி மாணவி அடித்து கொலை….

வேலூர் : ஆரணி அருகே தனியார் கல்லூரி மாணவி மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குன்னத்தூர் என்ற இடத்தில் கல்லூரி மானவை மோனிகா உடல் மீட்கப்பட்டுள்ளது. மலையம்பட்டைச் சேர்ந்த மோனிகா காட்பாடியிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது