#BREAKING: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை.

தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து துறை செயலாளர்களுக்கும் நிதித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதாவது, புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப தமிழ்நாடு நிதித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தினால் மாநில அரசுகள் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருக்கும் நிலையில், தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

pansion28

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment