தமிழ்நாட்டுக்கு தேலையில்லாத நீட் தேர்வை திணித்து சமூக அநீதியை மத்திய அரசு இழைத்து இருக்கிறது! பாமக நிறுவனர் ராமதாஸ்

மத்திய அரசின் அறிவிப்பு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தை திசை திருப்பும் நோக்கம் கொண்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும்  தமிழ்நாட்டுக்கு தேலையில்லாத நீட் தேர்வை திணித்து சமூக அநீதியை மத்திய அரசு இழைத்து இருக்கிறது என்றும் கூறினார்.நீட்  நுழைவுத் தேர்வை தமிழக அரசு அடியோடு எதிர்க்க வேண்டும். மேலும், உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை!சேலம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சேலம் நீதிமன்றம் கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது . ரவுடி கொலை வழக்கில் 8 பேருக்கு சேலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. முன்விரோதம் காரணமாக மோகன் என்ற ரவுடி 2010ம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது சேலம் நீதிமன்றம். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடியில் பேட்டரி கார் சேவையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்!

தூத்துக்குடியில் பேட்டரி கார் சேவையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான ரூ.6 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார் சேவையை  துவக்கி வைத்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

காஞ்சிபுரம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பெருநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

காஞ்சிபுரம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பெண்கள்  பெருநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காஞ்சிபுரம் பெருநகராட்சி 19 வார்டுக்குட்ப்பட்ட மாண்டுகணிஸ்வரர் மற்றும் ஒ.பி.குளம் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் முறையாக குடிநீர் வழங்காத பெருநகராட்சியை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்ளுடன் காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நல்லதம்பி ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்தது.இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ,தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தலைவரை நியமிக்க கோரிய மனுவில் தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் 4 ஆண்டு கால சாதனை இதுதான்!இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் டி.ராஜா பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து ந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் டி.ராஜா கூறுகையில்,  அனைத்து பிரிவினர் மீதான தாக்குதல், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லா நாடாகவும், சமூக பதற்றம், கலவரம் ஏற்படுத்தும் முனைப்பு போன்றவை தான் மோடியின் 4 ஆண்டு கால சாதனை என்று கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கோவையில் அதிகாரிகளின் சோதனையில் 750 கிலோ குட்கா பறிமுதல் !

கோவையில் அதிகாரிகளின் சோதனையில் 750 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . கோவையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையில் 750 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கோவை தாமஸ் வீதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பறிமுதல் செய்துள்ளனர்.இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

திருவாரூர் அருகே தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து!

திருவாரூர் மாவட்டம் அச்சுதமங்கலத்தில் தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த  விபத்தில் 22 மாணவ, மாணவிகள் காயமடைந்துள்ளனர்.மேலும் காயமடைந்தவர்கள்  சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

திருப்பூர் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை!

நேற்று  திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. வடுகபாளையம், காமனாய்க்கன்பாளையம், மானிக்காபும் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.இதனால் பொதுமக்களும்,விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

நரேந்திர மோடி பிரதமரானதற்க்கு காரணம் காங்கிரஸ் தான்! காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 70 ஆண்டுகளாக ஜனநாயகத்தை காங்கிரஸ் பாதுகாத்ததினால்தான் டீ கடைக்காரர் பிரதமரானார்  என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.