திருநெல்வேலியில் தமிழ்நாடு ஊரகவளச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

திருநெல்வேலியில் தமிழ்நாடு ஊரகவளச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரகவளச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று  7- வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்றது. 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை சந்திப்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

திண்டுக்கல் அருகே பேருந்துவசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திண்டுக்கல் அருகே பேருந்துவசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள்  மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள கொலைக்காரன்பட்டி கிராமத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் முறையாக பேருந்துவசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

முதலமைச்சர் பழனிசாமி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு!

முதலமைச்சர் பழனிசாமி  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். ஜூலை 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்கு நீர் திறக்கவும், நீர் திறப்பின் மூலம் 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சிபிஐ விசாரணை ..!தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது  என்று  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். இந்நிலையில்  இது தொடர்பாக வழக்கு ஓன்று விசாரணைக்கு வந்தது.பின்னர் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா … Read more

தூத்துக்குடியில் ஜூலை 11 முதல் 12ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு !

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜூலை 11 காலை 5 மணி முதல் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை 144 தடையுத்தரவு பிறப்பித்தார் தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் சந்தீப்நந்தூரி. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

புதுச்சேரியில் பிளாஸ்டிக்கை தடைசெய்ய தேசியமீனவ பேரவை தலைவர் இளங்கோ கோரிக்கை!

புதுச்சேரியில் பிளாஸ்டிக்கை தடைசெய்ய வலியுறுத்தி தேசியமீனவ பேரவை தலைவர் இளங்கோ கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர் கந்தசாமியை சந்தித்து மனு அளித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரில் பிளாஸ்டிக் தடை அறிவிப்பு வெளியிடவுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அதிகளவில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்திற்கு வரவேற்பு!அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் பொதுமக்களிடையே அதிகளவில் வரவேற்பு பெற்றுள்ளது  என்று  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்காக  ஏற்கனவே ரூ.25 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் ரூ.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும்  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு ..!நேரடியாக ஒளிபரப்ப முடிவு!

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்குகள் விசாரணையை இனி நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வழிமுறைகளை 23 க்குள் உருவாக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தர விட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம்!ஆவேசமாக பேசிய அமித் ஷா

இன்று  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். அமித் ஷாவை தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசியல் விவகார குழுவை சேர்ந்த 16பேரிடம் 39நாடாளுமன்ற தொகுதிகள் பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.இதில் தமிழிசை,முரளிதரராவ்,பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் பேசிய பாஜக … Read more

உலகின் மிகப்பெரிய கட்சி பாஜக!மொத்தம்11 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்!மார்ச் மாதத்திற்குள் பாஜக எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்!அமித் ஷா

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். அமித் ஷாவை தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசியல் விவகார குழுவை சேர்ந்த 16பேரிடம் 39நாடாளுமன்ற தொகுதிகள் பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.இதில் தமிழிசை,முரளிதரராவ்,பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் பேசிய பாஜக … Read more