காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த  நாளை சென்னை வருகிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கருணாநிதி உயிரிழந்ததையடுத்து புதுச்சேரியில் நாளை அரசு பொது விடுமுறை!

திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததையடுத்து புதுச்சேரியில் நாளை அரசு பொது விடுமுறை என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும் !முதலமைச்சர் பழனிசாமி

கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் திமுகவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்  என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும் .முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

நாளை கருணாநிதி மறைவையொட்டி  அரசு விடுமுறை..!டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம்..!

நாளை திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி  அரசு விடுமுறை என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் ! ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார். என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் — Rajinikanth (@rajinikanth) August 7, 2018

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதி மறைவுக்கு  இரங்கல்!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதி மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார். கருணாநிதி மறைவை அறிந்து வேதனை அடைந்துள்ளேன் என குடியரசு தலைவர் தமிழில் பதிவிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். — President of India (@rashtrapatibhvn) August 7, 2018

பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததை அடுத்து  இரங்கல்!

பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததை அடுத்து  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது மறைவை கேட்டு துயரமடைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார். My thoughts are with the family and the countless supporters of Karunanidhi Ji in this hour of grief. India and particularly Tamil Nadu will miss him immensely. May his soul rest in … Read more

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார் !அறிக்கை விவரம் இதோ

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியிட்ட மருத்துவ அறிக்கை: கடந்த ஜூலை 26 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படட கருணாநிதி குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அந்த அறிக்கையில் தில் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் , கருணாநிதியை 24 மணி நேரமும் அவரது வீட்டிலேயே மருத்துவ குழுக்கள் கவனித்துக் கொண்டிருக்கும் எனவும் , கருணாநிதியை … Read more

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்!

காவேரி மாருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  திமுக தலைவர் கருணாநிதி காலமானார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கமல்ஹாசன்  டெல்லியில் நாளை நடக்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு சென்னை திரும்புகிறார்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  டெல்லியில் நாளை நடக்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இன்று இரவு சென்னை திரும்புகிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.