திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார் !அறிக்கை விவரம் இதோ

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியிட்ட மருத்துவ அறிக்கை:

கடந்த ஜூலை 26 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படட கருணாநிதி குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அந்த அறிக்கையில் தில் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் , கருணாநிதியை 24 மணி நேரமும் அவரது வீட்டிலேயே மருத்துவ குழுக்கள் கவனித்துக் கொண்டிருக்கும் எனவும் , கருணாநிதியை நேரில் சந்திக்க யாரும் வர வேண்டாம் என காவிரி மருத்துவமனை சார்பாக கேட்டுக் கொண்டனர்.இதனால் உடல் நலிவுற்றுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கோபாலபுரம் வீட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் ஜூலை 27 ஆம் தேதி இரவு  இரவு திமுக தலைவர் கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.பின்னர்  காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்  செல்லப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி சரியாக மதியம் 02.30 மணிக்கு வெளியான மருத்துவ அறிக்கை:

 
கடந்த ஜூலை 28 ஆம் தேதி சரியாக மதியம் 02.30 மணிக்கு வெளியான தகவலில் திடீரென ஏற்படட ரத்த அழுத்த குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நலம் சீராக உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி சரியாக இரவு 8 மணிக்கு வெளியான மருத்துவ அறிக்கை:

கடந்த ஜூலை 28 ஆம் தேதி சரியாக இரவு 8 மணிக்கு வந்த அறிக்கையில் ,திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவித்தது.
ஜூலை 29 ஆம் தேதி 09.30 மணிக்கு வெளியான மருத்துவ அறிக்கை :

நேற்று ஜூலை 29 ஆம் தேதி 09.30 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது, சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவித்தது.
ஜூலை 31 ஆம் தேதி மாலை  06.30 மணிக்கு வெளியான  அறிக்கை:

கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை விவரம்:
இன்று(ஜூலை 31 ஆம் தேதி ) சரியாக மாலை  06.30 மணிக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் வகையில்  கருணாநிதியின் உடல் உள்ளது .கருணாநிதி தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். படிப்படியாக கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது.
மேலும்  வயது முதிர்வால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற வேண்டும். மருத்துவமனையில் தங்கி மேலும் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் உள்ளது. கல்லீரல் நலிவு மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான சிகிச்சைகள் தேவைப்படுகின்றது என்றும் அறிக்கையில் தெரிவித்தது .
கருணாநிதி காலமானார்  காவேரி மருத்துவமனை அறிக்கை விவரம்:

மாலை 6.10 மணிக்கு தி.மு.க தலைவர் கலைஞர் காலமானார் 95வது வயதில் தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment