சபரிமலை மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம் – கேரள அரசு அனுமதி!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை பங்கேற்கலாம் என கேரள அரசு அனுமதி கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிக் கூடங்கள், போக்குவரத்து, தொழிற்சாலை என அனைத்துமே ஒரு வருட காலங்களாக முடக்கப்பட்ட நிலையில் தானிருக்கிறது. தற்பொழுது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள முதல்வர்கள் ஊரடங்குகளை குறைத்து, பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். அதில் ஒன்றாக போக்குவரத்து, தொழிற்சாலைகள் எல்லாம் … Read more

பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு ஒரே மாதத்தில் கேரளாவில் 262 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!

கடந்த மாதம்  1-ஆம் தேதி தான் கேரளாவில் பள்ளிகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்ட நிலையில், அதற்குள் 262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரஸ் தாக்கம் தற்பொழுது வரையிலும் குறைந்தபாடில்லை. இருப்பினும் கொரோனாவின் வீரியம் சற்றே குறைந்து உள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிக் கூடங்களைஅரசாங்கம் திறந்துள்ளது. அதன்படி கேரளாவில் கடந்த மாதம் … Read more

மதுரை மெட்ரோ ரயில் சேவை தொடர்பான வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை அமல்படுத்த கோரி தொடரப்பட்ட  வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி நடந்து வரும் நிலையில், 20 லட்சம் மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அங்கு மட்டுமல்லாமல், கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவையும் தற்பொழுது வரையும் செயல்பட்டு வரும் நிலையில், மதுரை நகரை கடந்து திருமங்கலம், மேலூர், பெருங்குடி, … Read more

அரசியலில் கால்பதிக்கும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி!

ஒய் எஸ் ஆர் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமாகிய ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் சகோதரி ஷர்மிளா புதிய அரசியல் கட்சி ஒன்றை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் மதிப்பிற்குரிய முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆகிய ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி தான் ஷர்மிளா. இவரது சகோதரி புதியதாக ஒரு அரசியல் கட்சி துவங்க உள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் … Read more

மாணவர்களின் கதாநாயகன் முதல்வர் பழனிசாமி தான், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ரீல் – அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு!

மாணவர்களின் கதாநாயகனாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் ரீல் தான் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 31 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் நிகழ்ச்சியை துவங்கி வைத்து அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், எடப்பாடி … Read more

எம்.பி சீட் யார் கொடுத்தாலும் அவர்கள் பக்கம் சேர்ந்து கொள்ளுவேன் – நடிகர் சந்தானம்!

யார் தனது ராஜ்யசபையா எம்.பி சீட் கொடுத்தாலும் அங்கு சேர்ந்து கொள்ளுவேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் நக்கலாக பேசியுள்ளார். நடிகர் சந்தானம் இயக்குனர் ஜான்சன் கே அவர்களின் இயக்களின் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் எனும் புதிய படமொன்றில் நடித்திருக்கிறார். ஆ.வில்சன் அவர்களின் ஒளிபதில்வில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த ப டம் வருகின்ற 12 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் … Read more

தினமும் காலையில் பூண்டு சாப்பிடுவதால் என்ன பலன் தெரியுமா?

பூண்டு சமையலுக்கு மட்டுமல்ல பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது என்பது நமக்கு தெரிந்தது தான். இந்த பூண்டை தினமும் தொடர்ச்சியாக சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும், அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பூண்டு சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம் உள்ளது, ஆனால் எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என தெரியுமா? காலையில் வெறும்வயிற்றில் பூண்டுகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் தொற்று  நோய்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலால் … Read more

ஊழியர்களுக்கு பத்துநாள் ஊதியத் தொகையை போனஸாக அறிவித்துள்ள HCL நிறுவனம்- காரணம் தெரியுமா?

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான HCL  நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை எட்டியுள்ளதால், ஊழியர்களுக்கு 10 நாட்கள் சம்பள தொகையை சிறப்பு போனஸாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான HCL நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டி புதிய மைல் கல்லை எட்டி உள்ளதால் உலகெங்கிலும் உள்ள தனது நிறுவன பணியாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் 700 … Read more

166 மணிநேரத்தில் 560 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து உலக அளவிலான மாரத்தான் போட்டியை வென்ற இந்தியர்!

560 கிலோ மீட்டர் தூரத்தை 166 மணிநேரங்களில் கடந்து உலக அளவிலான பல நாள் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அருண்குமார் பரத்வாஜ் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். மும்பை -நாசிக் – புனே ஆகிய மூன்று நகரங்களுக்கு இடைப்பட்ட 560 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சர்வதேச பலநாள் மாரத்தான் ஓட்டப் போட்டி ஜனவரி மாதம் 31ஆம் தேதி துவங்கியுள்ளது. இந்தப் போட்டியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இருந்த நிலையில், இந்திய ஓட்டப்பந்தய வீரர் அருண்குமார் … Read more

இயந்திரங்கள் இல்லாமல் கையாலேயே வீட்டை மொத்தமாக தூக்கிய கிராம மக்கள்!

இயந்திரங்களின் உதவியில்லாமல் நாகலந்தின் மக்கள் சிலர் வீடு ஒன்றை அப்படியே தூக்கி இடம் மாற்றியுள்ளனர். தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் மக்கள் தங்களின் வசதிக்கேற்ப எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளும் அளவுக்கு அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்து விட்டது. முன்பெல்லாம், வீடுகள் ஒரு இடத்தில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் அதை இடித்துவிட்டு வேறொரு இடத்தில கட்டுவது தான் வழக்கம், ஆனால் தற்பொழுது இயந்திரங்களின் உதவியுடன் சிலர் வீட்டை அப்படியே நகர்த்துவதை பார்த்திருப்போம், கேள்வி பட்டிருப்போம். ஆனால், நாகலாந்து மாநிலத்தில் உள்ள கிராம … Read more