ஊழியர்களுக்கு பத்துநாள் ஊதியத் தொகையை போனஸாக அறிவித்துள்ள HCL நிறுவனம்- காரணம் தெரியுமா?

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான HCL  நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை எட்டியுள்ளதால், ஊழியர்களுக்கு 10 நாட்கள் சம்பள தொகையை சிறப்பு போனஸாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான HCL நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டி புதிய மைல் கல்லை எட்டி உள்ளதால் உலகெங்கிலும் உள்ள தனது நிறுவன பணியாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் 700 கோடி மதிப்புள்ள சிறப்பு போனஸ் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஊழியர்களுக்கும் பத்து நாள் ஊதிய தொகை போனஸாக பிப்ரவரி மாதத்துக்குள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி ஒரு லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளதால் இது குறித்து HCL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனத்தின் மிகப் பெரிய சொத்து எங்கள் ஊழியர்கள்தான் எனவும், சவாலான கொரோனா காலகட்டத்தில் கூட ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய ஊழியர்களின் பணி காரணமாக தான் எங்களுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் பலனாக கிடைத்துள்ளது எனவும் இந்நேரத்தில் எங்கள் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தங்களது நிறுவனத்தில் பணியாற்ற விருப்பமுளளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal