உஷார்ர்..! ‘Pink Whatsapp’ மூலம் திருடப்படும் தகவல்கள்- காவல்துறை எச்சரிக்கை..!

‘பிங்க் வாட்ஸ்-அப்’ என்ற பெயரில் பரவும் லிங்க் மூலம்,மொபைல் போனில் உள்ள தகவல்கள் ஹேக் செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக,பல்வேறு வாட்ஸ் அப் குரூப்களில் ‘பிங்க் வாட்ஸ்-அப்பினை’பயன்படுத்தலாம் என்று கூறி,லிங்க் ஒன்று பரவி வருகிறது. மேலும்,இது வாட்ஸ்-அப் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வமான வெளியீடு என்றும்,வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட் வெர்ஷன் என்றும் சொல்லப்படுகிறது. இதனை நம்பி பிங்க் வாட்ஸ்-அப்பை பதிவிறக்கம் செய்தால்,ஒரு புதுவகையான வைரஸ் பரவி நமது மொபைல் போனில் இருக்கும் புகைப்படங்கள்,வீடியோக்கள் … Read more

இனி சலூன் தொழிலிலும் களமிறங்கும் அமேசான் நிறுவனம்…!

ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் தற்போது சலூன் தொழிலிலும் தனது கால்தடத்தைப் பதிக்கவுள்ளது. ஆன்லைன் விற்பனை தொழிலில் முன்னிலையில் உள்ள அமேசான் நிறுவனமானது தற்போது லண்டனின்,பிரஷ்ஃபீல்ட் என்ற பகுதியில் தனது முதல் சலூன் கடையை நிறுவ திட்டமிட்டுள்ளது.இந்த சலூன் கடை 1,500 சதுர அடி பரப்பளவில் இரண்டு மாடிக் கொண்டு மிகப் பிரம்மாண்டமாக அமையவுள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டிக் கொள்வதற்கு வசதியாக ‘அகுமேட்டட் ரியாலிட்டி’ போன்ற நவீன முடிவெட்டும் மெஷின்கள் அமேசான் சலூன் கடையில் … Read more

தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு…!

தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் செல்கேவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வாங்கனி ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்தில் கண்பார்வை தெரியாத பெண் ஒருவர்,தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்தப் பெண்ணின் குழந்தை, திடீரென்று கால்தவறி தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது அதே தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.பார்வை தெரியாததனால்,குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் அந்தப் பெண் சத்தமாக குரல் எழுப்பினார். … Read more

கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்வதில் பாகுபாடு காட்டப்படுகிறது” – கிரேட்டா

கொரோனா தடுப்பூசிகள் வைத்திருப்பதில் உலக நாடுகளிடையே பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து வல்லரசு நாடுகளான அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி,இஸ்ரேல்,பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வாங்கி வைத்துக் கொள்கின்றன.இதனால் ஆசியா,ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்றடையாமல் இருக்கின்றன. இந்த நிலையில்,கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்வதில் பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். … Read more

மக்கள் அனைவருக்கும் ‘ராம நவமி’ வாழ்த்துக்கள்- பிரதமர் மோடி…!

பிரதமர் நரேந்திர மோடி,நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும்,கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். ராமபிரான் பிறந்த நாளான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்களும்,ராமர் பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்களும் என இரண்டு முறையில் விரதத்தை கடைப்பிடித்து,ராம நவமியை பக்தர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி,நாட்டு மக்களுக்கு தனது ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதவாது,”நாட்டில் … Read more

#Breaking:ரெம்டெசிவெர் தடுப்பூசி மீதான சுங்க வரி ரத்து..!மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

மத்திய அரசானது, கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் ரெம்டெசிவெர் தடுப்பூசி மற்றும் அதன் மூலப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.மேலும்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பானது 2லட்சத்து 50ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனையடுத்து,நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,பொதுநலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசானது சில முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது,நாட்டில் தற்போது மிகவும் … Read more

ரூ.100 முதலீடு செய்யுங்கள்..!ரூ.2.8 லட்சம் லாபம் பெறுங்கள்- இந்திய தபால் துறை…!

இந்திய தபால் துறையின், தேசிய சேமிப்பு திட்டத்தில் ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் வரையிலான லாபத்தைப் பெறுங்கள். இந்திய தபால் துறையானது மக்களுக்கு தொடர்ந்து பல அருமையான திட்டங்களை வழங்கி வருகிறது.அந்த வரிசையில்,தேசிய சேமிப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய சேமிப்பு திட்டத்தில்,குறிப்பிட்ட அளவிலான பணத்தை நாம் முதலீடு செய்ய முடியும்.மேலும்,முதலீடு செய்யும் பணத்திற்கு நிகராக பத்திரம் நமக்கு தரப்படும்.5 ஆண்டுகள் கழித்து நாம் முதலீடு செய்யும் பணத் தொகையானது வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல்,இத்திட்டத்தில் கடனுதவியும் … Read more

கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து…! சித்த மருத்துவரின் ஆலோசனை…!

கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து ஒன்றை மூத்த சித்த மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் மிகக் குறைவான பாதிப்பே இருந்தது.ஆனால்,தற்போது கொரோனா வைரஸின் 2வது அலையில் பாதிப்பானது மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.ஒவ்வொரு நாளும் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் 1,757 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்,கொரோனா குறித்து மூத்த சித்த மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறுகையில்,”கொரோனாவானது முதல் அலை,2வது … Read more

திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா…!

சென்னையில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகி வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே,இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில்,சென்னை அண்ணா சாலையில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையில் பணிபுரியும் 4 … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இலவச தக்காளி கிடைக்கும்…!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக 2 கிலோ தக்காளி வழங்கப்படும் என்று கர்நாடகவின் பிஜாப்பூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.மேலும்,ஒவ்வொரு நாளும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில்,கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இறப்பு ஏற்படும் மற்றும் உடல்நிலை பாதிக்கப்படும் போன்ற சில வதந்திகளால் வடமாநிலத்தில் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்படுகின்றனர். … Read more