#Breaking: ஹரியானாவில் 1,710 கொரோனா தடுப்பூசிகள் திருட்டு…!

ஹரியானா மாநிலத்தின்,ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து 1,710 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளன.அதனால்,மருத்துவமனையில் தற்போது 1 தடுப்பூசி கூட இல்லை என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பல மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன.இந்த நிலையில்,ஹரியானாவில் உள்ள ஜிண்ட் மாவட்டத்தின் பிபி சென்டர் பொது மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 1,710 தடுப்பூசி மருந்துகள் திருடு போய் விட்டதாகவும் தற்போது பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு ஒரு தடுப்பூசி கூட இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறி … Read more

ரயில்வே ஊழியரின் அந்த நல்ல மனசுக்கு பரிசாக கிடைத்த ஜாவா பைக்…!

மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் செல்கேவுக்கு பரிசாக ஜாவா பைக்கை தருவதாக பிரபல பைக் நிறுவனம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வாங்கனி ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்தில் கண்பார்வை தெரியாத பெண் ஒருவர்,தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்போது,அப்பெண்ணின் குழந்தை, திடீரென்று கால்தவறி தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது அதே தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.பார்வை தெரியாததனால்,குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் அந்தப் பெண் … Read more

வரப்போகிறது நவீன மாஸ்க்..!வெயிலில் காண்பித்தால் கொரோனா செத்து விடும்-ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் சாதனை…!

வெயிலில் காண்பித்தால் கொரோனா போன்ற வைரஸிலிருந்து தானாகவே சுத்தமாகிவிடும் ஒரு புதுவகையான மாஸ்க்கை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது அதிமாகப் பரவி வருகிறது.எனவே,கொரோனா வைரஸினால் பாதிக்காமல் இருக்க மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களும்,பல வண்ணங்கள் மற்றும் பல மாடல்களில் மாஸ்க் வாங்கி அணிகின்றனர்.இந்த வகையான மாஸ்க்குகள்,அடிக்கடி சலவை செய்து குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் வண்ணம் உள்ளன. இந்த நிலையில்,இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஐஐடி ஆராய்ச்சியார்கள்,அறிவியல் முறைப்படி மாலிப்டினம் … Read more

பிரான்ஸிலிருந்து,இந்தியாவுக்கு வரும் புதிய 4 ரஃபேல் போர் விமானங்கள்…!

பிரான்ஸ் நாட்டில் இருந்து 5 வது தவணை முறையில்,புதிய 4 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பிரான்ஸ் நாட்டில் உள்ள டஸ்ஸால்ட் ஏவியேசன் என்ற நிறுவனத்திடம் இருந்து,ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக,கடந்த 2016 ஆம் ஆண்டு அந்நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனம் இதுவரை 14 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் கொடுத்துள்ளது. இந்த நிலையில்,இந்தியாவில் இருந்து 5 நாள் சுற்றுப்பயணமாக … Read more

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று சத்யபிரத சாகு நடத்தும் 2 வது நாள் ஆலோசனை…!

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்யபிரத சாகு,வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே,கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு,வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்து இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஏற்பாடு செய்துள்ளார். இதனைத் … Read more

மேற்கு வங்கத்தில் இன்று தொடங்கிய 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு…!

மேற்கு வங்கத்தில் 43 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டத் தேர்தல் வாக்குபதிவானது இன்று தொடங்கிய நிலையில் மக்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் மொத்தம் 8 கட்டங்களாக வாக்குபதிவு நடைபெறுகிறது.இதில் முதல் 5 கட்டங்களாக 180 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில்,இன்று காலை 6 ஆம் கட்டத் தேர்தல் வாக்குபதிவானது தொடங்கியுள்ளது. இந்த 6 ஆம் கட்டத் தேர்தலில் 306 வேட்பாளர்கள் 43 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.மேலும்,14,480 வாக்குச்சாவடிகளில் 1 … Read more

சவூதி:கொரோனா பரவல் காரணமாக சப்ளை வேலை செய்யும் ரோபோக்கள்…!

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக சவூதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சப்ளை வேலைக்கு ரோபோக்கள் வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா பரவலானது கடந்த ஆண்டை விட,தற்போது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,சவூதி அரேபியாவின் ஜாசன் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் மனிதர்களுக்குப் பதிலாக சப்ளை வேலைக்கு ரோபோக்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த ரோபோக்கள்,வாடிக்கையாளர்களை மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றன.வாடிக்கையாளர்கள் என்ன ஆர்டர் செய்தார்களோ அவற்றை தாமதிக்காமல் உடனே கொண்டு … Read more

“ஆசிரியர்கள் இனி ஆன்லைன் மூலம் பாடம் நடத்த அனுமதி “- தமிழக ஆசிரியர் மன்றம்…!

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா 2 வது அலையானது விஸ்வரூபம் எடுத்து தீவிரமாகப் பரவி வருவதால்,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாகப் பாடம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கையில்,”அதிகப்படியான கொரோனா … Read more

#Breaking:”தடுப்பூசியை இலவசமாக கொடுங்கள்”-கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது அதிகரித்துவரும் நிலையில்,மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தினை  இலவசமாக வழங்க வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா இரண்டாவது அலையானது நாடு முழுவதும் அதிக அளவில் பரவி வருகிறது.இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி,கொரோனா தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசியின் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன. அதன்படி,கோவிஷீல்டு தடுப்பூசி விலையானது தற்போது விற்கப்படும் விலையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,கேரள … Read more

இந்தியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- சிங்கப்பூர் அரசு…!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூர் அரசு,  இந்தியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த 24 நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதன் காரணமாக,ஹாங்காங்,நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. மேலும்,ரஷ்யாவும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது சிங்கப்பூரும், இந்தியாவில் இருந்து கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு வருபவர்களுக்கு … Read more