மக்கள் அனைவருக்கும் ‘ராம நவமி’ வாழ்த்துக்கள்- பிரதமர் மோடி…!

பிரதமர் நரேந்திர மோடி,நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும்,கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

ராமபிரான் பிறந்த நாளான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்களும்,ராமர் பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்களும் என இரண்டு முறையில் விரதத்தை கடைப்பிடித்து,ராம நவமியை பக்தர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி,நாட்டு மக்களுக்கு தனது ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதவாது,”நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இனிய ராம நவமி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.ஸ்ரீராமரின் அபரிமிதமான இரக்கம் நாட்டு மக்கள் மீது என்றென்றும் தொடரட்டும். ராமா நீண்ட காலம் நீ வாழ்க!” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில்,”ராம நவமி தினமான இன்று அனைவரும் ராமரின் நல்வழிகளை பின்பற்றி நடக்க வேண்டும்.இந்த கொரோனா  நெருக்கடி காலத்தில்,வைரஸ் தொற்றினைத் தவிர்க்க கொரோனா முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை மக்கள் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.