பொறியியல் படிப்புகள் மீதான நாட்டம் குறைவு.?காரணம் வேலைவாய்ப்பின்மையா?

பொறியியல் படிப்புகள் மீது அதிக நாட்டமுடைய மாணவர்கள், தற்போது இளநிலை அறிவியல் படிப்புகள் மீது கவனத்தை திருப்பியிருப்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2015-16 கல்வியாண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த நிலையில், 2016-17 கல்வியாண்டில் 41 லட்சத்து 60 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில், இளநிலை அறிவியல் படிப்புகளில் 2015-16 கல்வியாண்டில் 43 லட்சத்து 80 ஆயிரமாக இருந்த மாணவர் சேர்க்கை, 2016-17 கல்வியாண்டில், 47 லட்சத்து 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இதற்க்கு காரணம் வேலையில்லா திண்டாட்டமே ஆகும்.பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் அதிகம்பேர் வேலை இல்லாமல் இருப்பதும் ஏதாவது கிடைத்த வேலையை பார்ப்பதுமே ஆகும்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment