தீவிரவாதிகளின் புகலிடம் தமிழகம் என பா.ஜ.க, செயற்குழுவில் தீர்மானம்

காரைக்குடி:’தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு வர அடக்க வேண்டும்’ என பா.ஜ.,மாநில செயற் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி யில் பா.ஜ., மாநில செயற்குழு மாநில தலைவர் தமிழிசை தலைமையில் நடந்தது. தேசிய செயலாளர் எச்.ராஜா முனனிலை வகித்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், இணை அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ், மாநில செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்றனர். தீர்மானங்கள் ஜி.எஸ்.டி., முறைக்கு … Read more

நீட்தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கும் அபாயம்:சீமான் பேட்டி

கமுதி:நீட்தேர்வால் கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவு எட்டாக்கனியாகி விடும், என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் பேசியதாவது: மதங்களுக்கு அப்பாற்பட்ட அப்துல்கலாமை, மதசாயம் பூச நினைக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் தமிழகத்தில் கிராமபுற மாணவர்களின் டாக்டர் கனவு எட்டாக்கனியாகிவிடும். குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் அரசுகள், நீட் தேர்வால் பாதிக்கப்படும் கிராமபுற மாணவர்களுக்கு குரல் கொடுக்க தயக்கம் காட்டுகிறது.கமுதி பகுதியில் தனியார் … Read more

ராகிங்கை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கணும்… யுஜிசி அறிவுறுத்தல்

சென்னை:  ராகிங்கை தடுத்து தீவிர நடவடிக்கை எடுக்கணும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்களில், ‘ராகிங்’கை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்குமாறு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து, யு.ஜி.சி., செயலாளர் ஜஸ்பால் சந்து, கல்லுாரிகள், பல்கலைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், புதிய மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பழைய மாணவர்கள், புதியவர்களை, ‘ராகிங்’ செய்யும் நடவடிக்கை, கிரிமினல் குற்றம். இது குறித்து, பல்வேறு வழிகாட்டுதல்கள், கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. முதல்வரின் … Read more

RSS பிரமுகர் படுகொலை..கேரள முதலமைச்சர் மற்றும் டிஜிபி-யிடம் ஆளுநர் நேரில் விளக்கம் கேட்டதால் சர்ச்சை.

திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் RSS பிரமுகர் ராஜேஷ் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனையும், கேரள மாநில டிஜிபி-யையும்  கவர்னர் சதாசிவம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டது குறித்து கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று பாஜக சார்பில் கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொல்லப்பட்டது தொடர்பாக பினராயி விஜயனை  மத்திய உள்துறை அமைச்சர் … Read more

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ.15 கோடி !! அம்பலமானது பாஜகவின் குதிரை பேரம் !!!

மாநிலங்களவைத் தேர்தலையொட்டி குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ.15 கோடி வழங்கி தங்கள் பக்கம் இழுக்க பாஜக விலைபேசியதாக பெங்களூருவில் தங்கவைக்கப்பட்டுள்ள அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பாஜக  எம்.பி.யாக உள்ள ஸ்மிருதி இரானி, திலீப்பாய் பாண்டியா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  அகமது படேல் ஆகியோரது பதவிக்காலம் ஆகஸ்ட் 18-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அகமது படேல் மீண்டும் … Read more

மீண்டும் மீண்டும் அத்துமீறும் பாக்.ராணுவம் – நள்ளிரவில் துப்பாக்கி சூடு!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறுவதும் பதிலுக்கு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதும் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாகி போய் விட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று நள்ளிரவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி  துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லை அருகே உள்ள ரஜோரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.  பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த திடீர் தாக்குதலையடுத்து இந்திய வீரர்கள் தக்க பதிலடி … Read more

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு- போராடத்தில் களமிறங்கிய ஸ்டாலின்!!

தங்கள் கிராமத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி 72 நாட்களாக போராடி வரும் கதிராமங்கலம் கிராம மக்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். கதிராமங்கலம் பகுதியில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்யக் கோரியும், ஓஎன்ஜிசி … Read more

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசை:நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரிக்கு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆசையாக இருக்கிறதாம். சமூக வலதைளங்கள் பக்கம் போனாலே பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தான் பேச்சு. சிலர் பப்ளிசிட்டிக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை திட்டினாலும், பெரும்பாலானோர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொழுது போக்கு நிகழ்ச்சியாக அன்றி வேறு பார்வையில் பார்க்கவில்லை.அவர்களுக்கு சரவணன் மீனாட்சியும், சூப்பர் சிங்கரும், பிக் பாஸும் ஒன்றுதான். இந்த நிலையில், நடிகை கஸ்தூரியை தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு விஜய் … Read more

ட்ரம்ப் வரைந்த ஓவியம் ரூ.18 லட்சத்துக்கு ஏலம்!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட ஏலம் ஒன்றிற்காக இந்த ஓவியத்தை அதிபர் ட்ரம்ப் வரைந்தார். இந்த ஓவியத்தில் தனக்கு சொந்தமான ’டிரம்ப் டவர்’ கட்டிடத்தை முன்னிலைப்படுத்தி ஓவியத்தை டிரம்ப் வரைந்திருந்தார். இந்த ஓவியம் லாஸ் ஏஞ்சல்ஸில் இயங்கும் நேட் டி சாண்டர்ஸ் என்ற ஏல நிறுவனம் மூலம்  ஏலம் விடப்பட்டது. வெறும் 9,000 அமெரிக்க டாலர்களில் … Read more

ஒப்புக்கொண்டபடி ஊதியம் தராவிட்டால் நாளை முதல் வேலை நிறுத்தம்: ஃபெஃப்சி யின் தலைவர் ஆர்.கே.செல்வமணி

ஒப்புக்கொண்டபடி ஊதியம் தராவிட்டால்  நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தென்னிந்திய திரைப்பட ஊழியர்கள் சம்மேளனமான  ஃபெஃப்சி யின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். ஃபெஃப்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதால் திரைப்பட தயாரிப்பு பணிகளை ஃபெஃப்சி சங்கத்துடன் இணைந்து செய்ய வேண்டிய தேவையில்லை என திரைப்பட தயாரிப்பாளர்  சங்கத் தலைவர் விஷால் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஃபெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி,  இந்த விவகாரம் தொடர்பாக ஃபெஃப்சி  சார்பில் 3 முக்கிய … Read more