தீவிரவாதிகளின் புகலிடம் தமிழகம் என பா.ஜ.க, செயற்குழுவில் தீர்மானம்

தீவிரவாதிகளின் புகலிடம் தமிழகம் என பா.ஜ.க, செயற்குழுவில் தீர்மானம்

Default Image

காரைக்குடி:’தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு வர அடக்க வேண்டும்’ என பா.ஜ.,மாநில செயற் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி யில் பா.ஜ., மாநில செயற்குழு மாநில தலைவர் தமிழிசை தலைமையில் நடந்தது. தேசிய செயலாளர் எச்.ராஜா முனனிலை வகித்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், இணை அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ், மாநில செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்றனர். தீர்மானங்கள் ஜி.எஸ்.டி., முறைக்கு அனைவரும் மாற வேண்டும். தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. பயங்கரவாதிகளை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.ஆன்லைன் மூலம் மணல் அள்ளுவதில் நடக்கும் முறைகேடுகளை களைந்து முறைப்படுத்த வேண்டும். அகில இந்திய தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்.வந்தே மாதரம் பாடலை பள்ளிகளில் பாட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக., 15ம் தேதியை தேசிய ஒருமைபாட்டு தினமாக நடத்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு நினைவகம் அமைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Join our channel google news Youtube