நாசா விஞ்ஞானி ஹைதராபாத்தில் கைது.. இளம் ஹீரோக்களுடன் தொடர்பு

 போதைப்பொருள் விற்பனை வழக்கில் நாசா விஞ்ஞானி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தெலுங்கு திரைத்துரையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாசா விண்வெளி ஆய்வுக்கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் அனீஷ். இவர் போதைப் பொருள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து கோகைன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரூத்தூர் அகர்வால் என்பவருடன் விஞ்ஞானி அனீஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை !

விஜய் டிவியில் தினசரி வெளியாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக கூறி, அதற்கு தடை விதிக்க கோரி இந்து மக்கள் கட்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி அமைப்பின் தலைவர் சிவா சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது, இந்திய மக்கள் மானமே முக்கியம் எனும் கொள்கைகள் உடையவர்கள், … Read more

உலககோப்பையில் இந்திய அணி பேட்டிங்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது இந்தியா. இதற்கு முந்தையை போட்டியில் இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்றிருந்த இந்திய அணி, முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இந்தப் போட்டியில் வெல்லும் முனைப்பில் உள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்குவதற்கு ஆதார் கட்டாயம்

 உலகிலேயே பணக்காரக் கடவுள் என்று வணங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறைகளை வாடகைக்கு விடுவதில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. திருப்பதி செல்வோருக்கு வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பதால் விடுமுறைக் காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில் என்ற சிறப்பை பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தக் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவோருக்கு புதிய திட்டத்தை தேவஸ்தானம் அமல்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்ல் திருமலையில் 6200 அறைகள் உள்ளன. … Read more

கங்குலி-ரவி சாஸ்திரி கடும் வாக்குவாதம்..இந்திய அணியில் பரபரப்பு

மும்பை: இந்திய அணி பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கானை நியமிப்பது தொடர்பாக சவுரவ் கங்குலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் நடுவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரவி சாஸ்திரியைவிட சேவாக்தான், இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர் என்பது கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர் கங்குலி கருத்து. ஆனால் அணியினரின் (கோஹ்லி) விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து ரவி சாஸ்திரியை நியமிக்க கங்குலியிடம் சக குழு உறுப்பினர் சச்சின்தான் வேண்டுகோள்விடுத்துள்ளார். சச்சின் கூறியதை தொடர்ந்து வேறு வழியில்லாமல் … Read more

இந்திய இராணுவ வீரர்கள் மரணம்..பாக் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஜம்மு: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின், புர்கி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். அவர்கள் சென்ற கான்வாயை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த எதிர்பாராத தாக்குதலினால் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.