ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக திருவாரூரில் போராடியதாக ஜெயராமன் உட்பட 129பேர் மீது வழக்கு !

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக திருவாரூர் நன்னிலத்தில் போராட்டம் நடத்த முயன்றதாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 129 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திருவாரூரில் ஒஎன்ஜிசி எதிர்ப்பாளர் ஜெயராமன் மீண்டும் கைது!

திருவாரூர் மாவட்டத்தில்  நன்னிலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட வந்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சங்க தலைவர் ஜெயராமன் கைது.

அடுத்த நெடுவாசல் உருவாகிறது…!

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் ரவி என்பவரது வயிலில் போடப்பட்டுள்ள மோட்டாரில் தண்ணீரோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகள் வெளியேறுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.

கதிராமங்கலம், நெடுவாசலில் 170 நாட்களாக போராட்டம் தொடர்கிறது…!

திருவிடைமருதூர்: கச்சா எண்ணெய் எடுக்கப்படுவதை நிறுத்தக்கோரி, தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் அங்குள்ள அய்யனார் கோயில் திடலில் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்புகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தின்போது கதிராமங்கலம் மண்ணை பாதுகாக்க துர்க்கை அம்மன் கோயிலில் பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினர். இன்று 132வது நாளாக பொதுமக்கள் போராட்டம் தொடர்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யக்கோரி புதுகை மாவட்டம், நெடுவாசலில் இன்று 170வது நாளாக பொதுமக்கள் போராட்டம் … Read more

ஜாக்டோ-ஜியோ போராட்டம்:அரசு அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது என தகவல்!!

ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் போராட்டத்தில் அரசு அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.

வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து-உயர் நீதிமன்றம் உத்தரவு..!

கதிராமங்கல மக்களுக்கு ஆதரவாகவும், ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராகவும் துண்டு பிரசுரம் வழங்கி போராடிய சேலம் பெரியார் பல்கலைகழக மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைக்க சேலம் போலீஸ் கமிஷனர் கடந்த ஜூலை 17 ல் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வளர்மதியின் தந்தை மாதையன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட், வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. 

நெடுவாசல் போராட்டம் 143-வது நாளைத் தொட்டது; இன்னும் மனமிறங்காத அரசுகளை கண்டித்து முழக்கங்கள்

புதுக்கோட்டை:நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, 143-வது நாளாக அப்பகுதியினர் போராட்டத்தைத் தொடர்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 12-ஆம் தேதி அப்பகுதி மக்கள் தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர். அதன்படி தினமும் வெவ்வேறு விதமான நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள், நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 143-வது நாளாகவும் … Read more

எண்ணெய் நிறுவனம் வெளியேற வேண்டும்: கதிராமங்கலம் மக்கள் கொந்தளிப்பு !!!

சுதந்திரதினத்தையொட்டி கதிராமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலக திருப்பனந்தாள் வட்டாரவளர்ச்சி உதவி அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். 300க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.  எண்ணெய் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதால் கதிராமங்கலத்தில் ஒட்டுமொத்த நீர்வளம் மற்றும் நிலவளம் பாதிப்பு அடைந்துள்ளது. சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. எண்ணெய்நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேறவேண்டும்.  மத்திய மாநில அரசுகள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் … Read more

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிலம் வழங்க மாட்டோம்… – கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்…!!!

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நிலம் வழங்கமாட்டோம் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது எனவும் நெடுவாசல் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனைக் கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ஆம் தேதி தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர். அதில் ஒவ்வொரு … Read more

125வது நாள் நோக்கி பயணிக்கும் நெடுவாசல் மக்களின் போராட்டம்…!

புதுக்கோட்டை, ஆக.15- புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 125வது நாளாக திங்கள்கிழமையன்றும் போராட்டம் தொடர்ந்தது.இரண்டாம் கட்டமாக 125-ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டம் 71-ஆவது சுதந்திரதினமான இன்றும் (15.08.2017) காலை … Read more