கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு- போராடத்தில் களமிறங்கிய ஸ்டாலின்!!

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு- போராடத்தில் களமிறங்கிய ஸ்டாலின்!!

Default Image
தங்கள் கிராமத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி 72 நாட்களாக போராடி வரும் கதிராமங்கலம் கிராம மக்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
கதிராமங்கலம் பகுதியில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுதலை செய்யக் கோரியும், ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி 72 நாட்களாக போராடி வரும் பொது மக்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அப்போது அப்பகுதி மக்கள் தந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், இப்பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சட்டப் பேரவையில் பேசுவதாகவும் உறுதி அளித்தார்.
ONGC முலமாக மீத்தேன் எடுக்கும் திட்டம் தமிழகத்தில் இவர்களது ஆட்சியில் தான் டெல்டா மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Join our channel google news Youtube